ஜெ,
சமூக வலைத்தளங்களைப் பற்றி நீங்கள் சொல்வதை நான் அவ்வப்போது கவனிப்பதுண்டு. மிகக்கடுமையான முறையில் அவற்றை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்ற எண்ணம் வந்ததுண்டு. ஆனால் இப்போது அது ஒரு நச்சுச்சூழல் என்ற எண்ணம் வந்துவிட்டது. அது மேட்ரிக்ஸ் படம் போல ஒரு மிகப்பெரிய அறிவு. அதில் ஒரு துளியாக நாம் நம்மை இணைத்துக்கொள்கிறோம். நாம் என்ன செய்யவேண்டும், எவருடன் உரையாடவேண்டும் என்று அதுதான் தீர்மானிக்கிறது. நம்முடைய எந்த போஸ்ட் போய்ச்சேரவேண்டும், எது மறையவேண்டும் என்று அது முடிவுசெய்கிறது. நமக்குரிய நண்பர்களையும் வாசகர்களையும் அதுதான் தேர்வுசெய்கிறது. நம் சூழலில் மதம், அரசு எல்லாம் சிந்தனையை அடிமையாக்கின. அதன் பின் கட்சிகள் நம்மை சிந்தனை அடிமையாக ஆக்கின. இப்போது இந்த மாபெரும் மேட்ரிக்ஸ் நம்மை அடிமையாக ஆக்கிக்கொண்டிருக்கிறது.
ஜே. ராகவன்