இயற்கையை ரசிப்பது ஆன்மிகமா?

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம் உங்களுடைய காணொளிகளில் நீங்கள் முன்வைக்கும் இயற்கையுடன் உறவு என்பது ஒரு அறிவார்ந்த நிலை மட்டும் அல்லவா ?இயற்கையை இயற்கை என்று ஒருவன் உணர ஆரம்பிக்கும்போது அவன் அதிலிருந்து தன்னை பிரித்து அறிகிறான் .இயற்கையை ரசிப்பது என்பது ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மனநிலைதான். இயற்கை அவர்கள் ஒரு பருப்பொருளாக பார்க்கிறார்கள். ஆகவே அவர்கள் அதை ரசிக்க ஆரம்பிக்கிறார்கல். இந்த மனநிலையுடன் இந்திய ஞான மரபின் மனநிலைக்கு ஏதேனும் தொடர்பு உண்டா? விளக்க வேண்டுகிறேன்.

சபரி

அன்புள்ள சபரி

மகாபாரதம் முதலே இலக்கியங்களில் இயற்கை வர்ணனைகள் பெருகிக் கிடக்கின்றன. சங்க காலம் இயற்கையே முதன்மைப் பேசு பொருளாகக் கொண்டது. இயற்கையை ரசிப்பது என்பது மனிதனின் அடிப்படை இயல்புகளில் ஒன்று மனிதன் மட்டுமே.  குரங்குகள் பிற விலங்குகள் கூட இயற்கையை ரசிக்கின்றன.

இயற்கை ரசிக்கும் போது இயற்கையில் இருந்து நாம் விலகி நின்று இருக்கிறோம் என்பது ஒரு பிழையான எண்ணம். உண்மையில் இயற்கை ரசிக்கும் போது படிப்படியாக நாம் நம்மை இழந்து இயற்கையை நோக்கி செல்கிறோம் .ஏதோ ஒரு கட்டத்தில் இயற்கையின் பகுதியாக நம்மை இழக்கவும் செய்கிறோம் .

அது மகத்தான அனுபவம்தான் .நீண்ட நெடுங்காலமாக அந்த தியானம் இந்தியாவில் பயிலப்பட்டு வருகிறது. இயற்க்கை யோகம் அல்லது பிரகிருதி யோகம் என்ற பெயரில் அதற்கு இங்கு ஒரு மரபும் உண்டு.

ஜெ

முந்தைய கட்டுரைஇளையதலைமுறையின் சிக்கல்கள்
அடுத்த கட்டுரைவடகிழக்கின் முன்னேற்றத்தின் பொறுப்பு