அன்புள்ள ஐயா,
திருமுறைகளை பண்ணுடன் கற்பிப்பீர்களா? பண்ணுடன் கற்க ஆசையாக உள்ளது
வனஜா
அன்புள்ள வனஜா,
நாங்கள் நடத்தும் நிகழ்வுகளின் பட்டியலை (ஜூலை இறுதி வரை) இந்த இணைப்பில் காணலாம்.
https://unifiedwisdom.guru/198636
இனிவரும் நிகழ்வுகளை இந்த இணையப்பக்கத்தில் உள்ள அறிவிப்புகளை பார்ப்பதன் வழியாக அறியலாம்
சைவம் சார்ந்த கல்வி இரு வகைகளில் நிகழ்கிறது
சைவத்திருமுறை அறிமுகம். இது சைவத்திருமுறைகளின் வரலாறு, தத்துவம், கவித்துவம் ஆகியவற்றை அறிமுகம் செய்யும் பயிற்சி. திருவாவடுதுறை ஆதீனப்புலவர் மரபின் மைந்தன் முத்தையா நடத்துகிறார். இதில் செய்யுள்களை வாசிப்பதும் பொருள்கொள்வதும் கற்பிக்கப்படும். வகுப்பு நாளை மறுநாள் அதாவது வெள்ளி காலை முதல் ஞாயிறு மாலை வரை நிகழும்
அடுத்த வகுப்பு சாந்திகுமார சுவாமிகள் நடத்தும் சைவசித்தாந்த வகுப்பு. அதில் சைவசித்தாந்தம் என்னும் தத்துவம் கற்பிக்கப்படும். திருமுறைகள் கற்பிக்கப்படாது. சைவ சித்தாந்தம் பசு பதி பாசம் என்னும் கருத்துக்கள் அடங்கியது. மெய்கண்டார் உருவாக்கிய ஞானமரபு அது.
பண்ணிசை என்பது இதில் சேர்ந்தது அல்ல. அது இசையின் ஒரு பகுதி. அதை அறிஞர்கள் கற்பிக்க முடியாது. இசைக்கலைஞர்களே கற்பிக்க முடியும். தகுதியான இசைக்கலைஞர்களை கண்டடைந்தால் நடத்துவோம்
ஆனால் வைணவ இலக்கியம் அதற்கான உச்சரிப்பு முறைப்படி மாலோலன் என்னும் கலைஞரால் பாடப்படுகிறது. அதற்கு ராஜகோபாலன் விளக்கம் அளிப்பார்.
முழுமையறிவு