இந்துக்கள் நம்பிவரும் ஒரு ‘ஐதீகம்’ உண்டு, ‘இந்துக்கள் பரந்த மனம் கொண்டவர்கள், மற்ற மதங்களை அறிந்து வைத்திருப்பார்கள், ஆனால் மற்ற மதத்தவர் இந்து மதம் பற்றி ஒன்றுமே தெரியாமலிருப்பார்கள்’ என்று. எனக்கும் அந்த மயக்கம் கொஞ்சம் இருந்தது.
உண்மையில் அது ஒரு மாபெரும் கற்பனை. இந்துக்களுக்கு இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றி தெரிந்திருப்பது மிகமிகக்குறைவு. தெரிந்துகொள்ள ஆர்வமும் இல்லை என்பதுடன் கடுமையான புறக்கணிப்பு அல்லது எதிர்ப்பும் உண்டு. அதை மறைக்கவே ‘இஸ்லாமியத் தோழர்’ ‘கிறிஸ்தவச் சகோதரர்கள்’ போன்ற பாவனைகள்.
ஒருவர் பிற மதங்களை ஏன் அறியவேண்டும்? பண்பாடு, ஆன்மிகம் என இரு தளங்களிலும் அதன் தேவை என்ன?
சிறில் அலெக்ஸ் நடத்தும் பைபிள் வகுப்புகள்
ஜூன்21 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் இவ்வகுப்புகள் நிகழும்
அமலன் ஸ்டேன்லி நடத்தும் பௌத்த மெய்யியல்- தியான வகுப்புகள்
நாள் ஜூலை 5,6 மற்றும் 7 (வெள்ளி, சனி ,ஞாயிறு)
நிஷா மன்ஸூர் நடத்தும் இஸ்லாமிய மெய்யியல் வகுப்புகள்
ஜூலை 12 13 மற்றும் 14
ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]