அன்புள்ள ஆசிரியருக்கு,
பல கேள்விகளுக்கு விடையாக youtube காணொளியில் தொடர்ந்து பேசி வருகிறீர்கள். எனக்கு அது சிந்தனையின் ஒரு பயிற்சியாகவே உள்ளது. பல கேள்விகளை எழுப்பி அதன் விடை கண்டுபிடித்து அதைக் கோர்த்து சிந்திப்பது எப்படி என்ற பயிற்சி. என்னுடைய ஒரு சில வட இந்திய நண்பர்கள் unifiedwisdom.today என்ற ஆங்கில வலைதளத்தை படிக்கிறார்கள். முக்கியமான Youtube காணொளிகளை ஆங்கிலத்தில் வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். அல்லது subtitles கூட இணைக்கலாம்.
அன்புடன்,
சபரீஷ் குமார்.