கவனம், கடிதம்

அன்புள்ள ஜெ

சென்ற தத்துவ வகுப்பில் மூன்றுநாளில் கிட்டத்தட்ட 18 மணிநேரம் வகுப்புகள் நடத்திக்கொண்டிருந்தீர்கள். எஞ்சியநேரத்தில் உரையாடல்.ஆனால் அதன் நடுவே டிராட்ஸ்கி பற்றிய ஒரு நூலை (400 பக்கம்) படித்து முடித்தீர்கள். அதன் உள்ளடக்கம் பற்றி விரிவாக உங்கள் கருத்துக்களையும் உரையாடலில் சொல்ல முடிந்தது. அதைப்பற்றி திகைப்புடன் பேசிக்கொண்டோம். எங்கள் முக்கியமான பிரச்சினையே கவனிக்க முடிவதில்லை என்பதுதான். படிப்பதையே திரும்பத் திரும்ப வாசிக்கவேண்டும்.

எத்தனை வாசித்தாலும் நினைவில் நிற்பதில்லை. கவனம்தான் இந்த காலகட்டத்தின் பிரச்சினை. உங்கள் தலைமுறையில் நீங்கள் எல்லாம் கொடுத்துவைத்தவர்கள். இன்று எத்தனையோ கவனக்கலைவு. தகவல்தொடர்பு என்பதே ஒரு சாபம் போல் ஆகிவிட்டது

 சிவா

முந்தைய கட்டுரைஉளச்சோர்வின் ஊற்றுக்கண்
அடுத்த கட்டுரைபறவைபார்த்தலும் குழந்தைகளும்