ஆசிரியருக்கு,
இதைத்தான் தங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். தன்னைத் தானே விமர்ச்சிக்க தெரிந்த எழுத்தாளரே பிறரை சிந்திக்க வைக்க முடியும்.இது இளம் எழுத்தாளர்களுக்கான அறைகூவல். வரலாறும்,தத்துவமும் எழுத்தாளர்களுக்கு அடிப்படை.தங்கள் ஆதங்கத்தின் வெளிப்படை உண்மையான இளைய தலைமுறை எழுத்தாளனை தட்டி எழுப்பும்.தாங்கள் கூறியது போல் தற்போதைய தலைமுறை எழுத்தாளர்களிடம் சரக்கு இல்லை.திரைப்படங்களும் அப்படிதான்.கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை வீணடிக்கிறார்கள்.
இதை எழுதும் போது வாகீச கலாநிதி.கி.வா.ஜகந்நாதனின் .திருமுருகாற்றுப்படை விளக்கத்தை படித்து கொண்டிருந்தேன்.இது ஒரு சமயநூல் போலவே இல்லை.ஆங்காங்கே
தமிழ் சங்க வரலாறு,தொல்காப்பியம்,பத்துப்பாட்டு, பற்றிய எளிய உரை. இது போன்ற எழுத்தாளர்களை இனி உருவாக்க முடியுமா என்ற ஐயம்.தங்களுடைய சிறுகதைகளை அவ்வப்போது,தங்களுடைய வலைதளத்தில் படிப்பேன்.கதை மாந்தர்கள் என் உறவினர்கள், நான் வாழ்ந்த களம் எல்லாம் கண்முன்னே வருகிறது.இன்றைய தலைமுறைக்கு அந்த வாய்ப்பு இல்லை, எனினும் தாங்கள் காணொளியில் குறிப்பிடுவதைப்போல தத்துவத்திலும்,வரலாற்றிலும், தொன்மத்திலும் ஒரு ஈர்ப்பு தேவை.
அதை தாங்கள் காசு கொடுத்தாவது வரவழைத்து சொல்லி கொடுக்க விரும்புவது உயர் எண்ணம்.எது எதுக்கோ பர்ணசாலை,பாசறை அமைக்கும் காலத்தில் நவீன இலக்கிய எழுத்துப்பயிற்சிக்கு ஒரு பட்டறை கண்டிப்பாக தேவை.இல்லை எனில் தமிழ் இலக்கியம் என்ற ஆலமரம் பட்டுப்போக வாய்ப்பிருக்கிறது.உங்கள் “முழுமையறிவு “முன்னெடுப்பு முயற்சி சிறப்பாக அமையும். உங்களைப்போன்ற வழிகாட்டிகள் தேவை.இது கலாச்சாரத்தை கண்டெடுத்து,மீட்டு மேலும் இலச்சியத்தை நோக்கி கொண்டு செல்லும்.
“It is better to light a candle than curse the darkness.Your video is really a brainstorming session and will be a curtain raiser to the young aspiring writers in Tamil.
தா.சிதம்பரம்.