திறமை, அறிவு- கடிதம்

ஆசிரியருக்கு,

Knowledge, Talent,Creativity ஆகியவற்றின் வேறுபாட்டை தெளிவாக எடுத்து கூறினீர்கள்.Dr.Ken Robinson என்ற மேற்கத்திய கல்வியாளர் “Schools kill Creativity “என்று கூறுவார்.அது போல Gardner என்ற கல்வியாளர் “Multiple Intelligence”பற்றி கூறுவார். தேசிய கல்வி கழகத்தில் இயக்குனராக இருந்த டாக்டர்.கிருஷ்ணகுமார் இதே கருத்தை தேசிய கல்வி திட்டத்தில் 2005 ல் வடடிவமைத்தார்.அதுதான் தற்போது புதிய கல்வி  கொள்கையாக  வந்திருக்கிறது.ஆனால் இந்தியாவில் பதினேழு மாநிலத்தில் மட்டுமே செயல் படுத்த படுகிறது.மற்ற மாநிலங்களில் அரசியல் கொள்கைக்காக ஏற்கவில்லை.மத்திய கல்வி வாரிய பாடதிட்டத்தை(C.B.S.E) ஏற்று நடத்தும் தனியார் பள்ளிகளில் சில இந்த Creativity மற்றும் Interdisciplinary approach ஐ பயன்படுத்தி Activities கொடுக்கிறார்கள்.ஆனால் மாநில அரசு நடத்தும் பள்ளிகளில் இதை செயல்படுத்த சரியான கல்வி நிர்வாகங்கள் இல்லை.மீண்டும் இங்கு சமூக இடைவெளி. Real Education starts once you go out of the school campus.என்று சொல்லுவார்கள்.பாரதியோ,

கம்பனோ,அல்லது கண்ணதாசனோ Creativity தளத்தில் வருகிறார்கள்.ஆனால் இன்றைய ஒரு தமிழ் முதுநிலைபட்டாதாரி ஒரு உயர்கல்வி முடித்த வேலைக்கு தகுதியான

 நபர்.திறமையும்,படைப்புதிறனும்  இந்திய பள்ளிகளில் ஏன் சாத்தியப்படவில்லை? எனில் குறிப்பிட்ட Timeframe ல் பாடதிட்டத்தை அதுவும் குறைந்த பட்சம் ஐந்து பாடத்தை முடிக்க வேண்டும் என்பதுதான்,அதுவும் Out of Syllabus எனப்படும் கேள்விகளுக்கு மதிப்பெண்  பதில் எழுதாமலேகொடுக்கப்படுகிறது.(Grace marks given even in NEET)சொல்கிற வேலையை செய்.என்பதுதான் இன்றைய  கல்வியாக உள்ளது.கல்வி நிறுவனங்களும் அப்படிதான்.ஒரு மாணவன் Out of box Thinking உடையவன் என்றால் அவன் தேர்வு முறையில் தோல்வியடைவது நிச்சயம்.இன்றைய கல்வித்திட்டத்தில் உயர்தர நட்சத்திர கல்வி நிலையங்களில் நீங்கள் குறிப்பிடும் Creative thinking சாத்தியம்.ஆங்கிலத்தில் ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவி நாவல் எழுதுவது சாத்தியப்படுகிறது.ஆனால் மற்ற பள்ளிகளில் Literacy rate (எழுத படிக்கும் அறிவு)கூட இல்லை என்று தற்போதைய புள்ளியியல் கூறுகிறது. அதற்கு தணிக்கை செய்யத்தான் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு National Literacy Test கொண்டு வந்தார்கள்.அதிலும் அரசியல்.எல்லோரையும் பாஸ் பண்ணிவிட மாநில அரசு தயாராக உள்ளது.கல்வி என்பது மாநில பட்டியலோ அல்லது மத்திய பட்டியலோ உள்ளது அல்ல.அது சமூகத்தை மாற்றும் ஒரு கூர்மையான கருவி என்பதை எல்லோரும்  உணர வேண்டும்.Eudcation is the only tool that can change the World.Martin Luther King.

தா.சிதம்பரம்

முந்தைய கட்டுரைதத்துவமும் மதமும், கடிதம்
அடுத்த கட்டுரைஅன்றாடங்களின் அழகு