மீண்டும் ஒரு முகிழ்த்தல்

அன்புள்ள ஜெ,

பெருஞ்செயல்களை தொடங்குவோம்என்ற உங்கள் காணொளியைக் கண்டபோது நான் ஹிமாசல் பிரதேசத்தில் உள்ள ரோடு (Rohru) என்ற இடத்தில் இருந்தேன். சிம்லாவில் இருந்து 150 கிமீ தொலைவில் இருக்கிறது. ’கிளம்பிச் செல்லுங்கள்என்று நீங்கள் சொன்னதைக் கேட்டு மேலும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. நீங்கள் பயணம் பற்றி பேசினாலோ எழுதினாலோ கூடுதல் ஆனந்தம்தான்.

அடுத்து நாள் ஒர் இமயப்பனி பயணம். சன்சல் பாஸ் (Chanshal pass) என்ற இடத்திற்கு. சன்சல் சிகரம் சிம்லா மாவட்டத்தின் உயரமான சிகரம். கொஞ்சம் எட்டினால் வானத்தை தொட்டுவிடும் உயரத்தில் இருந்தோம். சுற்றிலும் பனி. இமயம் தேவாத்மா என்று எழுதியிருக்கிறீர்கள். சித்தத்தை நிறைக்கும் அதி தூய வெண்மை.  

மீண்டும் ஒருமுகிழ்த்தல்தரிசனம்.

அன்புடன்,

ராஜா

முந்தைய கட்டுரைபறவையும் குழந்தைகளும்
அடுத்த கட்டுரைகஸல், கவிதை, மலை- ஜீவா சக்தி