பறவையும் குழந்தைகளும்

நமது குழந்தைகள், நமது பெற்றோர்

அன்புள்ள ஜெ

நான் அமெரிக்காவில் இருக்கிறேன். இங்கே என் குழந்தைகள் பெறும் கல்வியுடன் என் தம்பி பிள்ளைகள் இந்தியாவில் பெறும் கல்வியை ஒப்பிட்டுக்கொண்டே இருக்கிறேன். இங்கேயும் அங்கேயும் பாடங்கள் பெரும்பாலும் ஒன்றுதான். பயிற்சி இங்கைவிட அங்கே அதிகம். இந்தியக்குழந்தை ஒருவேளை கணிதம் போன்றவற்றில் அமெரிக்கக்குழந்தையைவிட அதிகப்பயிற்சி கொண்டதாகக்கூட இருக்கும். ஆனால் நடைமுறை அறிவு இருக்காது. மிகுந்த தயக்கம் இருக்கும் எதிலும். அத்துடன் அண்மைக்காலமாக வாசிப்புக்கான பயிற்சி அறவே இருக்காது. முழுக்கமுழுக்க செல்போன் அடிமைத்தனம். கேம் அடிமைத்தனம். அதன் அபாயம் இன்னும்கூட இந்தியப்பெற்றோருக்கு தெரியாது. தங்கள் பையன்களை பயிற்சி அளிப்பதிலேயே வெறியுடன் இருக்கிறார்கள். அமெரிக்காவில் என் குழந்தைகளுக்கு இந்த இணைய அடிமைத்தனம் இல்லை. காரணம், புற நடவடிக்கைகள். நேரடியாக கள அனுபவம். பறவை பார்ப்பது, இயற்கையை அவதானிப்பது, நாடகங்கள் போன்ற பலவிதமான செயல்முறைப் பயிற்சிகள். அந்த வகையான பயிற்சிகளை அளிக்க இந்தியக்கல்விமுறையில் உண்மையில் இடமும் இல்லை. அந்தவகையான கல்வியை நீங்கள் உங்கள் அமைப்பு வழியாக அளிப்பதை அறிந்தேன். மகிழ்ச்சி

ஶ்ரீனிவாஸ் அரவிந்த்

முந்தைய கட்டுரைஉருது இலக்கியமும் மலைக்குளிரும்- கடலூர் சீனு