இந்திய தத்துவத்தை ஏன் கற்கவேண்டும்?

அன்புள்ள ஜெ

உங்கள் காணொளிகளில் இந்திய தத்துவத்தை ஏன் கற்கவேண்டும் என்னும் பேச்சும், இந்திய தத்துவத்திற்கும் மேலை தத்துவத்துக்குமான வேறுபாடு பற்றிய உரையும் முக்கியமானவை. இந்திய தத்துவம் பற்றிய அறிமுகம் கொண்ட எவருக்கும் தெரியும் ஒன்று உண்டு, இந்திய தத்துவம் உலகியல் சார்ந்தது அல்ல. அது பிரபஞ்சம் பிரம்மம் பற்றித்தான் அடிப்படையாகப் பேசுகிறது. அரசியல், சமூகக்களங்களில் அது நேரடியாகப் பொருள்படுவதில்லை. இன்றைய சூழலில் நேரடியாக அரசியல் சமூகவியல் தொடர்ச்சி இல்லாத சிந்தனையானது பயனற்றதாகவே கருதப்படும். இந்த சிக்கலைத் தீர்க்கும் சிந்தனைகளை விவேகானந்தர் கொண்டிருந்தார். நாராயணகுருவும் அவ்வாறே சிந்தித்தார். ஆனால் அதன்பிறகு இந்தியாவில் வேதாந்தம், இந்திய மெய்ஞானம் பற்றிப் பேசியவர்கள் அதன் அரசியலையோ சமூகவியலையோ பேசவே இல்லை. ஆகவே அவை அப்படியே மடங்களுக்குள் முடங்கிவிட்டன.

ஜெய்குமார் ராம்

முந்தைய கட்டுரைஅத்வைதமும் விசிஷ்டாத்வைதமும்