கலைக்கான பயிற்சி

அன்புள்ள ஜெ

இந்தியாவில் சாமானியர்களிடம் ஒரு மனநிலை உண்டு. கலைகளை அறிய எந்த பயிற்சியும் தேவையில்லை என நினைக்கிறார்கள். எந்த அறிமுகமும் இல்லாமல் கர்நாடக இசையை கேட்டுவிட்டு பிடிக்கவில்லை என்பார்கள். கோயில் சிலைகளை பார்க்க ரெண்டு கண் மட்டும் போதும் என எண்ணுவார்கள். இவர்கள் விழுந்து விழுந்து பார்க்கும் சினிமாவை ரசிப்பதற்கே இவர்களுக்கு ரசனைப்பயிற்சி கிடையாது. எதையும் அறிவதென்றால் அப்படி ஒரு சோம்பல். ஆனால் எல்லாவற்றிலும் கருத்து சொல்ல முண்டியடிக்கிறார்கள். நீங்கள் நீண்டகாலமாக தெரிந்துகொள்ளுங்கள் என்று அறைகூவிக்கொண்டே இருந்தீர்கள். இப்போது தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்து அழைக்கிறீர்கள். குறவானவர்களே வருகிறார்கள். ஆனால் வருகிற ஒவ்வொருவரும் ஒரு வகையில் இங்கே உள்ள மனநிலைகளை கடந்து உங்களிடம் வருகிறார்கல். அவர்கள் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்குபவர்கள்.

ராமகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைசென்னையில் ஓர் இலக்கியப் பயிற்சி முகாம்
அடுத்த கட்டுரைபதஞ்சலியோகம் அறிவிப்பு