அவரவர் இடம்

 

அன்புள்ள ஜெ

உறவுச்சிக்கல்களைப் பற்றிய உரை கேட்டேன். (அணில் சத்தங்கள்). இன்றைய உறவுகளின் முக்கியமான பிரச்சினையே உறவுகளைப் பற்றிய ரொமாண்டிக் ஆன எண்ணங்கள்தான். ஒருவர் இன்னொருவருக்காகவே வாழ்வது, ஒருவர் இன்னொருவருக்காக வாழ்க்கையை தியாகம் செய்வது போன்ற பாவனைகள். அதன் வழியாக ஒருவர் இன்னொருவரின் வாழ்க்கையை ஆக்ரமிப்பதும், அடக்கி ஒடுக்குவதும்தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்த ஆக்ரமிப்பை பாசம் என்றும் காதல் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். 

பெற்றோர் பிள்ளைகளின் வாழ்க்கையில் அந்த ஆக்ரமிப்பைச் செலுத்துகிறார்கள். அதை பின்னர் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர்  செய்துகொள்கிறார்கள். அதன் வழியாக வாழ்க்கையை நாசப்படுத்திக்கொள்கிறார்கள். அவரவருக்கான இடத்தை அவரவருக்கு கொடுத்தாலே இங்கே பிரச்சினை எளிதாகிவிடும். இந்த விவாதத்திலுள்ள உங்களுடைய clearheadedness மகிழ்ச்சி அளிக்கிறது.

கௌசல்யா நாகநாதன்

முந்தைய கட்டுரைஆன்மிகப் பயிற்சிகள் என்னென்ன?