எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு.
நான் சில வருடங்களுக்கு முன்பு பதினொன்றாம் வகுப்புக்கு ஆங்கிலப்பாடம் நடத்திக்கொண்டிருந்தேன் அதில் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகளின் ஆங்கில மொழி பெயர்ப்பு கதைகளும் இடம் பெற்றிருந்தன.மலையாள சிறுகதைகளும் இதில் உண்டு. இதை External reader என்பார்கள்.தகழி சிவசங்கரன் பிள்ளை, சுந்தரராமசாமி, அசோகமித்திரன் சிறுகதைகளும் இதில் அடங்கும்.ஆனால் இவை பாடப்புத்தகங்களாக இருந்த காரணத்தால் வெளி உலக வாசகர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. மேலும் தமிழ் நாட்டில் வாசிப்பே குறைவு. இதில் ஆங்கில இலக்கியம் கேட்க வேண்டாம்.தங்களுடைய அறம் சிறுகதை Stories of the true. ஆங்கில மொழிபெயர்ப்பு அமெரிக்க மண்ணில் வெற்றிகரமாக விற்பனையாவது குறித்து மகிழ்ச்சி. தமிழ் நவீன இலக்கியத்தை மேலைநாடுகளில் ஆங்கிலம் வழியாக அறிமுக படுத்துவது என்பது இந்திய பிராந்திய கலாசாரத்தை அறிமுக படுத்துவது போன்றது.அதுவும் அவர்கள் நாட்டில் வெளியிடப்படும் பதிப்பகங்கள் மூலாமாக வெளிவருவது சிறப்பு.நீங்கள் தனிப்பட்ட முறையில் அந்நாட்டிகு சென்று தமிழ்நவீன இலக்கியத்தை பரப்பி வருவதற்கு நன்றி.இது நமதுநாட்டின் உண்மையான முகத்தை மேலைநாட்டிற்கு மட்டுமல்ல நம்மைநாமே பார்த்து கொள்ள உதவும் ஒரு கண்ணாடி.நமது நாட்டில் உள்ள ஆங்கிலம் தெரிந்த இளைய தலைமுறையையும் சென்று அடையும்.
உங்கள் எழுத்துப்பணி தொடரட்டும்.வாழ்த்துக்கள்.
தா.சிதம்பரம்.










