அன்புள்ள ஜெ
ஓவியக்கலை ரசனை வகுப்பு பற்றிய செய்தியை வாசித்தேன். நான் இந்திய ஆலயக்கலை வகுப்புக்குச் சென்று வந்தேன். மேலைநாட்டு ஓவியக்கலையை நான் கற்றுக்கொண்டே ஆகவேண்டுமா? தேவை என்ன?
ஶ்ரீதர்
அன்புள்ள ஶ்ரீதர்
எதையும் கற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்பதில்லை. சில பயன்கள் உள்ளன என்று மட்டுமே சொல்லமுடியும்.
நாம் இன்று வாழும் உலகம் நவீன ஐரோப்பிய ஓவியக்கலையால் உருவாக்கப்பட்டது. நம்முடைய கட்டிடங்கள், வீட்டுப்பொருட்கள், இயந்திரங்கள், கருவிகள், ஆடை எல்லாமே நவீன ஓவியக்கலையில் இருந்து உருவானவை. இவற்றின் அழகியல் என்ன, இவற்றை எப்படி ரசிப்பது, எப்படி மதிப்பிடுவது என்பதை புரிந்துகொள்ள நவீன ஓவியக்கலை அறிமுகம் உதவியானது.
நவீன ஓவியக்கலையில் இருந்துதான் நாம் இன்று நம் பண்டையக் கலைச்செல்வங்களை பார்க்கிறோம். வேறுவழியே இல்லை. நம் முன்னோர் பார்த்த பார்வை நமக்கு வரவே வராது. ஆகவே மரபை அறிந்துகொள்கையில் நாம் எதைக்க்கொண்டு மரபை அறிகிறோம் என அறிவதும் அவசியமானது.
ஜெ
டு