சைவத்தை மூன்றுநாளில் கற்பதா?

அன்புள்ள ஜெமோ

சைவசித்தாந்த வகுப்புகள் பற்றிய செய்தியைப் பார்த்தேன். சைவமரபு என்பது ஆழங்கால்பட முடியாதது. அதை ஒருவர் எப்படி மூன்றுநாளில் கற்பிக்கமுடியும்?

காசிநாதன்

அன்புள்ள காசிநாதன்

ஆழம்கால்பட முடியாத கடல் ஆயினும் ஒருவர் கணுக்கால் நனையும்படி முதலில் இறங்கலாம் அல்லவா? எதையும் சிறியதாக மட்டுமே தொடங்கமுடியும். கைலை மலைக்கான பயணம் உங்கள் இல்லத்தில் இருந்து எடுத்துவைக்கும் முதல் அடியில் தொடங்குகிறது.

இது சைவ மரபைச் சொல்லிக்கொடுக்கும் வகுப்பு அல்ல. சைவ சித்தாந்தம் என்பது இந்திய மெய்ஞானமரபில் உருவான ஒரு தனித்தன்மை கொண்ட தத்துவக்கொள்கை. அதை அறிமுகம் செய்யும் வகுப்பு. இது தொடக்கம், ஆர்வமுள்ளவர்கள் வாழ்நாள் முழுக்க நீடிக்கும் கல்வியை அடையலாம். இத்தகைய கல்வி எனக்குத் தெரிந்து இன்று வேறெங்கும் இல்லை.

ஜெ

 

 

முந்தைய கட்டுரைஆலயக்கலை அறிதல் பக்திக்கு எதிரானதா?
அடுத்த கட்டுரைசம்ஸ்கிருதம், கடிதம்