ஆசிரியருக்கு,
தங்கள் காணொளிகளில் ஒரு விரைவு எப்பொழுதும் தென்படுவதை பார்க்கிறேன்.சொல்ல வேண்டியதை அழுத்தம் திருத்தமாக ஆனால் விரைவாக வெளிக்கொண்டு வந்து விடுவீர்கள். பொதுவாக ஆன்மீக உரையாற்றுபவர்கள் மென்மையாக ,மெதுவாக பேசுவார்கள் என்ற தன்மை உண்டு.அதிலும் அவர்கள் சொல்லாமல் விட்ட கருத்துக்கள் உண்டு.The wearer of the shoes knows where his shoe pinches)என்பார்கள் ஆங்கிலத்தில். உங்கள் பேச்சில் சொல்லப்படாத குறைபாடு உங்களுத்தான் தெரியும் .வாசகர்கள் அவர்கள் கோணத்தில் உங்கள் பேச்சில் குறை காண்பார்கள்.அது வேறு கோணம்.
மதம் வேறு தத்துவம் வேறு. மதம் மூலம் தத்துவத்தை அடைவதுதான் நடைமுறை. தத்துவம் மூலம் மதத்தை அடைவது மறுநிலை.இரண்டும் வேறு வேறு எனினும் இரண்டும் தேவைப்படுகிறது. காரணம் நம் நாட்டில் அடையாளங்கள் மூலமாகவே மெய்யறிவை அடைந்திருக்கிறார்கள்.Known to the unknown. வேத காலம் முதல் கயிற்றரவு கதை உண்டு.தேவை.எழுத படிக்க எப்படி பள்ளிக்கூடங்கள் தேவையோ அது போல மதங்கள் தேவை. காரணம் வழிகாட்ட தவறினால் மனிதனும் மிருகமே.குறையில்லாத மனிதன் இல்லை,பிழையில்லாத எழுத்து பேச்சு இல்லை. சொல்ல வந்த கருத்து காதில் போய் சேர்ந்ததா என்பது முக்கியம்.
அண்மையில் .Error is erasable .Mistake can be corrected. But a blunder never. என்ற சொற்றொடரை கேட்டேன்.நன்று சிந்தித்து எழுதுபவனுக்கு கருத்துப்பிழை குறைவாக ஏற்படுவது இயல்பு.அதுதான் குறை.ஒன்றும் எழுதாவிட்டால் குறையேதுமில்லை.நம்மிடம் மறைந்திருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தவே பேச்சும் எழுத்தும்.போற்றுவோர் போற்றட்டும்.புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டடும் .என் கடன் பணி செய்து கிடப்பதே.என்ற தாயுமானவர் பாடலை நினைவு கொள்கிறேன்.ஆனந்த விகடனின்” இலட்சினை வாக்கியம் எல்லோரும் இன்புற்றிருப்பது அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே.”
குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா என்பது நேர்முகச்சிந்தனை.
தொடரட்டும் முழுமையறிவு.
தா.சிதம்பரம்.