அன்றாடங்களின் அழகு

அன்புள்ள ஜெ

உங்கள் கானொளிகளில் தத்துவம், உளவியல், இலக்கியம் என பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். எல்லாமே ஆழமனாவை, அழகானவை. ஆனால் எனக்கு தனிப்பட்டமுறையில் நிறைவளிப்பவை நீங்கள் அன்றாட வாழ்க்கையைப் பற்றி பேசும் காணொளிகள்தான்.

அன்றாடவாழ்க்கையில் உள்ள எளிமையான இன்பங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். முன்பெல்லாம் அதற்கு எங்கே நமக்கெல்லாம் நேரம், உங்களுக்கெல்லாம் கொடுப்பினை என நினைப்பேன். அந்நினைப்பு பிழையானது என இப்போது உணர்கிறேன். அன்றாடம் எல்லாருக்கும்தான் உள்ளது. எல்லாருக்கும் கொஞ்சமாவது சொந்தமான நேரமும் உள்ளது. அதைப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியவில்லை. அதற்கு ஒரு தனி மனநிலை தேவையாகிறது. அந்த மனநிலையை நாம் பயிலவேண்டியிருக்கிறது. அந்த பயிற்சிதான் உங்கள் காணொளிகள் வழியாக கிடைக்கிறது.

நான் ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பில் வாழ்பவன். இங்கே எனக்கு சொந்தமான செடிகள் இல்லை. மலர்கல் இல்லை. ஆனால் பால்கனியில் சில செடிகளை வைத்திருக்கிறேன். காலையில் மலர்ந்த பூக்களைப் பார்ப்பேன்.அழகான காலையில் பூக்களுடன் கொஞ்சநேரம் பால்கனியில் அமர்ந்து டீ குடிப்பேன். அதுவே என் காலைகளை இன்றைக்கு அழகாக ஆக்கியுள்ளது. மனநிலைதான் முக்கியம். அதை உருவாக்கி அளிக்கும் உங்களுக்கு நமஸ்காரம்

சந்தானம்

முந்தைய கட்டுரைதிறமை, அறிவு- கடிதம்
அடுத்த கட்டுரைபறவைபார்த்தல் வகுப்புகள் (சிறார்களுக்கும்)