இலக்கியத்தில் நகரங்கள்

இலக்கியத்தில் நகரங்கள் ஏன் எதிர்மறையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன என்று விவாதித்திருந்தீர்கள். முக்கியமான காரணம் என்று எனக்குப் படுவது ஒன்றே. கிராமங்களில் ஒரு community life உள்ளது, அது நகரங்களில் இல்லை. நகரங்களில் அத்தனைபேரும் தனிமையில் வாழ்கிறார்கள். இதனால் உறவுகள் சிக்கலாகின்றன. பல உளச்சோர்வுகள் உருவாகின்றன.நகரம் அதன் கேளிக்கைகளையும் கொண்டாட்டங்களையும் கொண்டதுதான். ஆனால் அது அனைவருக்கும் அல்ல. மிகமிகச் சிலருக்கே அதெல்லாம் உள்ளது. எஞ்சியவர்கள் கூண்டுகளுக்குள் வாழ்கிறார்கள். போக்குவரத்தில் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள். எத்தனை உழைத்தாலும் பணம் போதாமல் அலக்க்கழிகிறார்கள். அதெல்லாம்தான் உண்மையான பிரச்சினை. ஆகவேதான் மிடில்கிளாஸ்களின் பர்வையில் நகரம் அத்தனை கொடுமையானதாக உள்ளது. அதுதான் இலக்கியத்திலும் வெளிப்படுகிறது

சங்கரராமன்

 

முந்தைய கட்டுரைஉயிர் எத்தன்மைத்து?
அடுத்த கட்டுரைஆதித்தகரிகாலன் கொலை, கடிதம்