ஏ.ஐ- எழுத்து

அன்புள்ள ஜெயமோகன்

ஏஐ யை பயன்படுத்தி எதையும் எழுதிவிடலாம், அதுதான் ‘மாடர்ன்’ என்று என் பையன்கள் உட்பட இளைஞர்கள் நம்புகிறார்கள். உன் பக்கத்துவீட்டுக்காரனும் அதையே எழுதுவான் என்றால் அதற்கு என்ன பொருள் என்று கேட்டால் புரிவதே இல்லை. “நீயெல்லாம் பழைய ஆள்” என்கிறார்கள். நம்மால் அவர்களுக்குச் சரியான விளக்கத்தை அளிக்க முடிவதில்லை. விளக்கினாலும் அவர்கள் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. அவர்களுக்கு சௌகரியமாக இருப்பதனால்தான் செய்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே கிரியேட்டிவாக இருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் விளக்கம் அருமையானது. ஆங்கிலத்தில் சொல்லியிருப்பது இன்னும் உதவியானது. நான் பலருக்கு அதை பரிந்துரைத்தேன். அதில் சொல்லியிருக்கும் சப்கான்ஷியஸ், கலெக்டிவ் அன்கான்சியஸ் போன்றவை இளைஞர்களுக்குப் புரியவில்லை என்றாலும் அவர்களுக்கு உதவும் அருமையான உரை அது. நன்றி.

சங்கீதா ஸ்ரீனிவாஸ்

முந்தைய கட்டுரைகுருபூர்ணிமா அனுபவம்- செல்வக்குமார்
அடுத்த கட்டுரைநவீன மேலைக்கலை அறிமுகம்