ஏன் பரவவில்லை?

அன்புள்ள ஜெயமோகன்,

நான் முழுமையறிவு காணொளிகளை தொடர்ச்சியாகப் பார்த்து வருகிறேன். தொடக்கத்தில் உங்கள் உச்சரிப்பு எனக்குப் புரியாமலிருந்தது. நான் தெள்ளத்தெளிவான அச்சடித்த உச்சரிப்பில் பேசுபவர்களை கேட்டுப் பழகியது காரணமாக இருக்கலாம். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உச்சரிப்பு பழகியபின் அந்த உரைகள் ஒவ்வொன்றும் எனக்காகவே பேசுவதுபோல அவ்வளவு அந்தரங்கமானவையாக ஆகிவிட்டன. ஒரு நாள்கூட அவற்றைக் கேட்காமலிருப்பதில்லை. ஆனால் இத்தனை தெளிவான முறையில் மிக அடிப்படையான செய்திகளைச் சொல்லும் இந்த காணொளிகள் ஏன் ஆயிரக்கணக்கிலே பார்க்கப்படவில்லை என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.

மா. பெரியசாமி

அன்புள்ள பெரியசாமி,

பொதுவாக கட்சிக்காரர்களின் காணொளிகளை அவர்கள் தங்களுக்குள் பகிர்வார்கள். வம்புகள், பொழுதுபோக்குகளை நண்பர்களுக்குள் பகிர்ந்துகொள்வார்கள். ஆகவே அவை பரவுகின்றன. என் காணொளிகளைப் பார்ப்பவர்கள் அவற்றை பெரும்பாலும் பகிர்வதில்லை.

ஜெ

காணொளிகள் தொகுப்பு

 

 

முந்தைய கட்டுரைமாபெரும் கோயில்களை உண்மையில் நாம் தான் கட்டினோமா?
அடுத்த கட்டுரைஇசை, ஆலயம், மெய்யியல்- யோகேஸ்வரன் ராமநாதன்