தொல்பாறைகளின் தொடுகை

அன்புள்ள ஜெ,

இந்த குகை ஓவியங்கள் நம்முடைய மூதாதையர்களின் கைகளால் செதுக்கப்பட்டது என்பதை அறிந்துக்கொண்டு காணும் பொழுது இந்த ஓவியங்கள் மீது இனம்புரியாத பற்றுதல் ஏற்படுகிறது.அதை அருகில் சென்று கைகளால் தொட்டுப்பார்க்க வேண்டும் என உந்துதல் ஏற்படுகிறது.இந்த ஓவியங்கள் குறித்தும் இந்த பிரபஞ்சம் குறித்தும் எண்ணில்லாத கேள்விகளும் முடிவில்லாத பதில்களும் என்னை தூங்க விடாமல் செய்பவை லிங்க வடிவங்கள் குறித்து  கற்பனை செய்து ஏலியன்களை உருவாக்கி கதைகளை எழுதியிருக்கிறேன். இருப்பினும் வானியலும் இப்புவியின் புரியாத புதிர்களும் எப்பொழுதும் வசீகரிப்பவை .அதனின் புரியாத தன்மை தான் அப்படி வசீகரிக்கின்றது போல.

நீங்கள் தொடுகையைப்பற்றி ஒரு பதிவில் கூறியிருப்பீர்கள் நுண் உணர்வு படைத்தவர்களுக்கு மலரின் தொடுகை கூட பாரமாக இருக்குமென அந்த வரிகளைப்படித்துவிட்டு அதன் தாக்கத்திலேயே திரிந்தேன்.என் மனதின் சில திறப்புகளுக்கு அந்த வரிகள் காரணமாக இருந்தது.

ஏன் எனக்கு மட்டும் ஏன் எனக்கு மட்டும் இப்படி என பாதிப்புக்குள்ளாகும் பொழுதெல்லாம் கேட்டுக்கொண்டே இருந்ததற்கான பெரிய பதில் அந்த தொடுகை எனும் வார்த்தை தந்தது நீங்கள் பிரபஞ்சத்தைப் பற்றிஇந்த காணொளியில் சொல்லியிருப்பதைப்போல உண்மை எங்கும் விரவி ஒளிந்து இருக்கிறது .அதைக்கண்டுக்கொள்வது அவரவருக்கு பொறுப்பு.சில நுண் உணர்வு கொண்டவர்களை அது தானாகவே வந்தடைகிறது இந்தக்காணொளிப்போல 

மிகவும் நன்றி 

என்றும் அன்புடன் 

தேவிலிங்கம்

முந்தைய கட்டுரைபங்கேற்பு அரசியல் -திறல் சங்கர்
அடுத்த கட்டுரைவாசிப்பு வகுப்பு அனுபவம்- ஈஸ்வரி பிரியா