அன்புள்ள ஜெ
உங்கள் காணொளியில் சொன்னது உண்மை. இன்றைக்குள்ள இளைஞர்கள் தாங்கள் இன்னவகையானவர்கள் என அவர்களே ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அவர்களே அதைச் சொல்லிக்கொண்டு அலைகிறார்கள். அவர்களே பலவகையான மனநோய்களையும் கற்பனையாகச் சொல்லிக்கொள்கிறார்கள். டிப்ரஷனில் இருக்கிறேன் என்று சொல்வது ஒரு பேஷனாகவே உள்ளது.
சரன்











