விரிவான காணொளிகள் தேவையா?

அன்புள்ள ஜெ,

நலம்தானே?

உங்கள் பயிற்சி வகுப்புகள் பற்றிய செய்திகளை அறிந்தேன். காணொளிகள் சிறப்பாக உள்ளன. அவை சுருக்கமாக உள்ளன என்று நினைக்கிறேன். பல காணொளிகளில் தத்துவக் கொள்கைகளையும் தத்துவம் சார்ந்த அமைப்புகளையும் ஓரிரு வரிகளில் சொல்லிச் செல்கிறீர்கள். அவற்றை விளக்கமான காணொளிகளாக வெளியிட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என நினைக்கிறேன். யோசிப்பீர்கள் என நம்புகிறேன்

கிருஷ்ணசாமி மாணிக்கம்

முழுமையறிவு- காணொளிகள்

அன்புள்ள கிருஷ்ணசாமி,

நான் வெளியிடும் காணொளிகள் எங்கள் பயிற்சி வகுப்புகளுக்கான அறிமுகங்கள் மட்டுமே. இன்னின்ன விஷயங்கள் பயில்வதற்கு உள்ளன, அவற்றை இப்படியெல்லாம் பயிலலாம், பயில்வதற்கான முறை இது, பயிற்சிக்குத் தடைகள் இவையெல்லாம் என அக்காணொளிகளில் சொல்கிறேன். ஆனால் அக்காணொளிகளே பயிற்சிகள் அல்ல. காணொளிகள் வழியாக தத்துவத்தைக் கற்க முடியாது. கற்றுவிட்டோம் என்னும் பொய்யான மனப்பிம்பமே உருவாகும். அது மேலும் அறியாமையை அளிப்பது. ஆகவே நாங்கள் இணையக்கல்விக்கு நேர்எதிரானவர்கள். இக்காணொளிகளை இணையக்கல்வியின்பொருட்டு நாங்கள் வெளியிடவில்லை

ஜெ

முந்தைய கட்டுரைஇஸ்லாமிய – சூஃபி மரபை ஏன் கற்கவேண்டும்?
அடுத்த கட்டுரைகுருபூர்ணிமா, கடிதம்