ஜெ அவர்களுக்கு வணக்கங்கள்
நான் ஜமீலா, அமெரிக்காவிலிருந்து எழுதுகிறேன். குரு பூர்ணிமா அன்று இந்தியாவில் இருப்பதால் நானும் கலந்து கொள்ள விரும்புகிறேன். முன் பதிவு செய்ய விரும்புகிறேன். நன்றி
ஜமீலா
அன்புள்ள ஜமீலா
குருபூர்ணிமா நிகழ்வை இரண்டு பகுதிகளாக அமைத்துள்ளோம். குருபூர்ணிமா இவ்வாண்டு ஞாயிற்றுக்கிழமை வருகிறது. வெள்ளி சனி இரண்டு நாட்களும் வாசிப்புப் பயிற்சி நிகழும். ஞாயிறன்று வெண்முரசு நாளாகக் கொண்டாடப்படும்.
வாசிப்புப்பயிற்சிக்கு வருபவர்கள் அப்படியே தொடரலாம். பிறர் ஞாயிறு காலையில் வந்து கலந்துகொண்டு திங்கள் கிளம்பிச் செல்லலாம். ஞாயிறு மாலையில் கிளம்புபவர்களும் வரலாம்
குருரபூர்ணிமைக்கான தனி அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்
ஜெ