இருவேறுலகம்

ஆசிரியருக்கு வணக்கம்,

இன்று என் அலுவலகத்தில் பெண்களுக்கான ஒரு சிறப்பு Leadership Training நடத்தப்பட்டது. இது கடந்த மூன்று மாதத்தில் நான் பங்கேற்றும் இரண்டாவது பயிற்சி. முதல் பயிற்சியின் பயனே என்ன என்று புரியாமல் யோசித்துக்கொண்டு இருக்கும் வேளையில் இது அடுத்தது. இவர்கள் profile லை பார்த்தால் USAவில் பயிற்சி முடித்தவர்கள் 18- 20 ஆண்டுகள் பெரிய நிபுணராக பணிபுரிந்தவர்கள், இன்னும் பல பல கதைகள். ஆனால் இவர்கள் எதையுமே புதியதாகக் கூறவில்லை, தங்களின் வெண்முரசு நாள் வலையொளியில் சொன்னதுபோல மாற்றி மாற்றி ஒரே விஷயத்தைப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இதுபோன்ற பயிற்சிகளில் அரை மணிநேரத்துக்குமேல் அமரமுடியவில்லை, நானும் தங்களின் வாசிப்பு பயிற்சியில் பயின்ற ‘Undivided attention , Negation falalcy’ அனைத்தையும் சொல்லி மனதைப் பிடித்துவைக்க முயற்சிசெய்து தோல்வியடைவதே வழக்கம். இவர்கள் கூறும் “self discovery, desicion making, leadership ஸ்டைல்ஸ்இன்னும் பலநூறு management jargons எதுவுமே ஒரு உணரத்தக்கப் பயனை அளிப்பதில்லை. மாறாக இவை அனைத்துமே இலக்கியம் வழி நான் கண்டடைந்ததே என்று தோன்றுகிறது

இது இந்த பயிற்சியில் பங்குபெற்ற அனைவருக்குமே இவ்வாறுதான் இருதிருக்கும் என்று எண்ணி அவர்களிடம் பேசியபோது புரிந்தது அவர்கள் அனைவருக்குமே இந்த பயிற்சிகள் மிகவும் பிடித்திருந்தது ஆனால் உண்மையில் இவர்கள் மேடைகளில் அபத்தமாக எதையாவது பேசிக்கொண்டு இருக்கும் மாக்களை போலத்தான் sophisticated settings ல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்இதை வெளிப்படையாகச் சொல்லியும் வெளியேற முடியவில்லை, இவர்கள் என்னை விட அனுபவத்திலும் அதிகாரத்திலும் பல பல படிகள் மேலே உள்ளவர்கள், இவர்கள் சொல்வதை வைத்தே எல்லாம் நடக்கும் இங்கே, எனினும் நான் இவர்கள் வைத்திருக்கும் ‘Rating and recognition’ எதைப்பற்றியும் அக்கறைகொள்ளவில்லை. ஆனால் அன்றாடம் பார்கும் வேளைகளில் சந்திக்க வேண்டிய தேவையில்லாத நெருக்கடிகளில் ஒருபோதும் சிக்கிக்கொள்ளக்கூடாது என்ற எண்ணம் மட்டுமே தடுக்கிறது

இந்த பயிற்சிகள் தான் இப்படி என்றால் மறுபக்கம் இந்த கார்ப்பரேட் எலிபந்தயத்தில் மூழ்கித் தத்தளித்துக்கொண்டு இருக்கிறேன்…. எனக்கான இடம் இது இல்லை என்று உணர்ந்தபோதும் இதை விட்டு வெளியே செல்லவும் முடியவில்லைபெற்றோரை பார்த்துக்கொள்ள வேண்டும் தங்கை கல்யாணம் அதன் பின் செலவுகள் என கண்முன் வந்துசெல்லஇங்கு இருந்து வேறு வேலைக்குச் சென்றாலும் இதேதான் நிலத்தைஎன் பணி வேறு ஆனால் அது என்ன என்று என்னால் இன்னும் கண்டடைய முடியவில்லை. இந்தச்சூழலைக் கடக்க விடையைத் தேடிக்கொண்டு இருக்கிறேன். இந்த நிலையை எதிர்கொள்ள ஏதேனும் வழிகள் உள்ளனவா?

நன்றி

ஜெய்ஸ்ரீ

அன்புள்ள ஜெய்ஶ்ரீ

ஒரு பண்பாடு ஒட்டுமொத்தமாக உருவாக்கிக்கொண்டிருக்கும் ஒரு சூழலில் இருந்து தனிமனிதர்கள் எளிதில் வெளியேறிவிட முடியாது. இன்றைய கார்ப்பரேட் சூழல் நம்மை அதன் சிறு பகுதியாக ஆக்கிவிடுகிறது. நம் ஆளுமையை சிறிதாக்கி அர்த்தமற்றதாக்குகிறது. மிகச்சிலருக்கே அதில் இருந்து வெளியேறும் ‘ஆடம்பரம்’ அமைகிறது. எஞ்சியோர் அதற்குள் தங்களுக்கான இடத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டியதுதான்.

அதற்கு முதல்வழி, அதை ஒரு வெளிநிகழ்வாக எடுத்துக்கொள்வது. உணர்ச்சிகரமாக ஈடுபடாமல் இருப்பது. அதை வாழ்க்கையின் மைய இலக்காகக் கொள்ளாமல் இருப்பது. முடிந்தவரை விலகியிருந்து அதேசமயம் முடிந்தவரைச் சிறப்பாக அதை ஆற்றுவது. நமக்கான வெளியை நாமே உருவாக்கிக்கொண்டு அதில் நம் கனவுகளையும் இலக்குகளையும் அதை நோக்கிச் செல்லும் மகிழ்ச்சியையும் அடைவது

ஜெ

 

 

 

முந்தைய கட்டுரைசம்ஸ்கிருதத்தின் இடம் என்ன?
அடுத்த கட்டுரைவாசிப்பில் அடைவது