ஒத்திசைவு, கடிதம்

ஆசிரியருக்கு,

For want of a nail, a war is lost.என்ற ஆங்கில சொல்லாடல் ஞாபகத்திற்கு வந்தது.Social Conformity பற்றி எடுத்துரைத்தீர்கள்.Max weber என்ற சமூகவியலாளர் Functionalism என்ற சமுகவியல் கோட்பாட்டில் இதைத்தான் கூறுகிறார்.சமூக அமைப்பில் ஒரு சமூக  நிறுவனம் மாறும் போது மற்ற முக்கியமான சமூகஅங்க  அமைப்புகளை அது பாதிக்கும் என்றார்.ஒரு விமானத்திற்கு பறக்க எப்படி ஒரு திருகாணி தேவைப்படுகிறதோ அதுபோல.இந்த ஒத்திசைவு நம் மானுட  சமூகத்தில் குறைந்து வருவதே போர் போன்ற வன்முறை கலாச்சாரத்திற்கு காரணம். ஒரு சிறிய விஷயத்திற்கு நாம் ஒத்திசைய மாட்டோம் அதனால் பல சமூக இழப்புகள்.உதாரணத்திற்கு ஷார்ஷாவில் சாத்தியப்படும் 

ஒரு கட்டடிட கலை நம்முடைய நாட்டில் வருவதற்கு பத்து வருடம் தாமதமாகிறது.காரணம் ஒத்திசைவுயின்மை.அரசியல் பொருளாதார ஒத்திசைவு இன்மை.மானுடத்தின் ஒத்திசைவு எங்கிருக்கிறதோ அங்கெல்லாம்

படைப்புத்திறன் சாத்தியப்பட்டிருக்கிறது.மேலாண்மை தத்துவத்தில் இதை Team work என்கிறார்கள். இளையராஜாவின் இசைப்பயணம் ஒரு ஒத்திசைவு.நாம் அனைவரும் அவர் நடத்தும் இசையை பார்த்திருக்கிறோம்.நேர்த்தியான ஒத்திசைவு. அதனால் அவரால் சிம்பொனியை கொடுக்க முடிகிறது.  

நம்முடைய பேச்சிலும், எழுத்திலும்,செயலிலும் ஒத்திசைவு இருந்தால் நம்முடைய சமுதாயமும் நல்ல பல திட்டங்களை செயல் படுத்த முடியும்.மானுடத்தின் ஒத்திசைவை உருவாக்க  தத்துவங்கள் மற்றும் சித்தாந்தங்கள் தேவை.அவற்றின் மீது நம்பிக்கை தேவை.உலகமே கண்ணுக்கு தெரியாத ஒரு ஒத்திசைவில் இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் மட்டும் தன்னுடைய குறுகிய மனதால் தன்முனைப்பால் இந்த ஒத்திசைவை இழந்து நிம்மதியில்லாமல் வாடுகிறான்.மீண்டும் சேக்கிழார் பெரியபுராணம் உலகம் யாவையும் தாமுளவாக்கலும் நிலை பெறுத்தலும்,அலகிலா விளையாட்டும் ஞாபகம் வருகிறது. மானுட ஒத்திசைவு பற்றிய தங்கள் காணொளி ஒரு மீட்பு பார்வையாக இருந்தது.

நன்றி.

தா.சிதம்பரம்

முந்தைய கட்டுரைநம்முள் எழும் புரவி
அடுத்த கட்டுரை அருமருந்து