ஜெயமோகன் அவர்களுக்கு,
Solitary reaper என்ற ஆங்கிலக்கவிதை William Wordsworth அவர்களால் எழுதப்பட்டு இலக்கிய உலகில் பிரபலமானது.தனிமை (Loneliness) ஏகாந்தம் (Solitude) பற்றிய விளக்கம் அருமை. புரிந்து கொள்ளப்பட வேண்டிய விளக்கம்.தனிமை ஏன் உருவாகிறது, அதன் கொடுமை என்ன என்பதையும், ஏகாந்தம் ஏன் இனிமை அதன் தன்மை மற்றும் பலன்கள் பற்றி தெரிந்து கொண்டோம். தனிமை மற்றும் ஏகாந்தம் பற்றிய உளவியல் ரீதியான கருத்துக்களை எடுத்துரைதற்கு நன்றி.தனிமையை கடந்து செல்வது எப்படி மற்றும் ஏகாந்தத்தை உணர்வது எப்படி என்ற தங்கள் வாழ்க்கை நிகழ்வுகள் மூலமாக உதாரண படுத்தி அதன் மூலம் தனிமனித மனநலனை வளர்த்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் கொடுத்தது. மீண்டும் ஒரு உளவியல் வகுப்புக்கு சென்று வந்தது போன்ற உணர்வு.முத்தாய்ப்பாக தனிமையிலிருந்து ஏகாந்தத்திற்கு செல்லும் வழிமுறைகளை அறிவுரையாக எடுத்து கூறியதற்கு மீண்டும் ஒரு வாழ்த்து.வாழ்க்கையை செதுக்கும் நல்ல எண்ணங்களை அவ்வப்போது காணொளி மூலம் வெளியிடவும்.கற்றலின் கேட்டல் நன்று என்பார்கள்.தனிமையிலிருந்து ஏகாந்தம் ஒரு தவம். தவத்தை பயின்று பலன் பெறலாம்.
தா.சிதம்பரம்