கேள்வி கேட்கும் கலை. 

கேள்வி கேட்கும்  குழந்தைகளை நாம் ஏன் உற்சாகப்படுத்த வேண்டும்? எதையுமே உடனே ஏற்றுக் கொள்ளாமல் சிந்தனை செய்து கேள்வி கேட்க கற்றுக் கொடுக்க வேண்டும். சாக்ரடீஸ் என்ற  தத்துவஞானி முதலில் கேள்வி கேட்கும் கல்வி முறையின்  முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் .சாக்ரடீஸ்  தன்னுடைய வாழ்நாளில் சீடர்களிடம் கேட்கச் சொல்லி அதன் மூலம் பதில்களை வரவழைத்து தேவையான ஞானத்தை  தன்னுடைய மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மாணவரிடம் சரியான கேள்விகளை கேட்க வைப்பது என்பது மிக முக்கியம் ஆசிரியர்களுக்கு அது பெரிய சவாலும் கூடஅவர்கள் இந்தக் கேள்வி கேட்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். வகுப்பறைகளில் குழந்தைகள் கேள்வி கேட்காமல் இருக்கும் பொழுது அவர்கள்  சரியான தகவல்களை அறிய முடியாமல் போகிறது .இந்த முறையில் அவர்கள் கற்றல்  முறை வீணாகப் போகிறது. நமது கல்வி நிலையங்களில் ஏன்  இல்லாமல் இருக்கிறது. தற்போது ஆசிரியர்கள்  மாணவர்களுக்கான  சவாலான கேள்விகளை உருவாக்க முடிவதில்லை காரணம்  பாடத்திட்டத்தில் உள்ள கேள்விகளை மட்டுமே அவர் கேட்கிறார்கள்பாடத்திட்டத்தின் மூலம் பெறும் பட்டயங்களும் அறிவுத்திறன் சார்ந்ததாக இல்லை. மாணவர்கள்  இந்த உலகத்தை சுயசிந்தனைகளுடன்   பார்ப்பதில்லை. திறமையான முறையில் அவர்களை சிந்திக்க வைப்பதே கல்விக்கு அழகு. மாணவர்கள் ஒரு கேள்வியை அதனுடைய கருத்தை அறிந்து  சரியான முறையில் ஆலோசித்து சிந்தித்து கேள்வி கேட்பதன் மூலமாக நல்ல அறிவுத்திறனை பெற முடியும் .கல்வி நிலையங்கள் மாணவர்களை அருமையான கேள்விகளைக் கேட்பவர்களாகவும் சிந்திப்பவர்களாகவும் மாற்ற வேண்டும் .

எதனால் இந்த கல்வி முறை, கேள்வி கேட்கும் முறை, இதில் உள்ள தடங்கல்கள்  உள்ளன என்றால் முதல் முதலில்  ஆசிரியர்கள் மாணவர்களை நேரடியாக கேள்வி கேட்பதில்லை,வினாத்தாள் மூலமாக கேள்வி கேட்கப்படுகிறது மேலும்  ஆசிரியர்கள் பாடத்திட்டத்தை முடிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். இரண்டாவதாக மாணவர்கள் கேள்விகளை கேட்க தயக்கம் காட்டுவதும் ஆகும் தவறான  கேள்வியை  கேட்டு விடுவோமோ ?என்ற பயத்தால்  மாணவர்கள் கேள்வி கேட்பதில்லை. மூன்றாவதாக கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு ரீதியாக ஆசிரியர்களிடம் பணிவு மற்றுப்  அடக்கமாக பழகி கொண்ட காரணம்  நான்காவதாக ஆங்கிலத்தில் புலமை இல்லாத காரணத்தால் அவர்கள் கேள்விகளை கேட்க தயங்குகிறார்கள் , பயிற்று மொழி தமிழ்  என்பதால்.

 ஆசிரியர்கள் எப்படி மாணவர்களை கேள்வி கேட்பதற்கு  உற்சாகப்படுத்த,ஊக்கப்படுத்த  முடியும்.  ஆசிரியர்கள் மாணவர்களுடன் நட்பு ரீதியாகவும் நல்ல ஆலோசராகவும் இருக்க வேண்டும். இரண்டாவது கேள்விக்குறிய ஐயப்பாடுகளை மாணவர்களிடம்  நீக்க  வேண்டும் .உதாரணமாக ஒரு சிறுகதை கூறும்போது அந்தக் கதையின் முடிவு என்ன? இந்த கதையில் கூறப்பட்டுள்ள கருத்து, விழுமியங்கள் என்னஎன்பதை கேட்க வேண்டும். அதுபோல கணித பாடதத்திலுள்ள சூத்திரங்களை  மாணவர்களிடம்  அந்த கணித சூத்திரத்தின் வடிவமைப்பை கதைபோல  கூறி கேள்வி கேட்க வேண்டும். மூன்றாவதாக உரையாடல்  முறையில்(கேள்வி பதில்) மாணவர்களிடம்  பாடத்தை  நடத்த வேண்டும் நடத்த வேண்டும் .தன்னால் அறியும் அறிவை அவர்களிடம்  ஊக்கப்படுத்த வேண்டும் .கேள்வி கேட்கும் திறன் என்பதை ஆசிரியர்கள்  தங்கள்  அதிகாரத்தை பயன்படுத்துவதாக இருக்கக் கூடாது, விவாதம் செய்வதாகவும் நினைக்கக் கூடாது .மாணவர்களை தவறான கண்ணோட்டத்துடன் அணுகக் கூடாது.

 மனப்பாடம் செய்து படிக்கும் கல்வி ஒரு நல்ல மாணவனை உருவாக்குவதாக இருக்க முடியாது .சாக்ரடீஸ் கூறிய  வழிமுறைப்படி கேள்வி கேட்பதன்  மூலமாகவே ஞானத்தை பெற முடியும். கடைசியாக வகுப்பறையில் கேள்வி கேட்பதன் மூலம் மாணவர்களின்  மனதில் நல்ல மாற்றத்தை உண்டு பண்ண முடியும் .மாணவர்கள்  கேள்வி கேட்பதன் மூலம்  நன்றாக ஞானத்தை பெறுவீர்கள் என்ற  உறுதிமொழியை ஆசிரியர்களும் உருவாக்க வேண்டும்அதுவே நல்ல கல்வி முறை ஆகும்

டி. சிதம்பரம் தோவாளை

முந்தைய கட்டுரைதனிமை, ஏகாந்தம்- கடிதம்
அடுத்த கட்டுரைநாவலை எழுதவைப்பது…