எழுத்தும் விடுதலையும்

https://www.manasapublications.com/manasalitprize

அன்புள்ள ஜெ

உங்கள் காணொளியில் நீங்கள் சொல்லும் ஒரு விஷயத்தை கவனித்தேன். பல நூறாண்டுகளாக இந்தியப் பெண் ஆணாதிக்க- தந்தைவழிச் சமூகத்தால் உருவாக்கப்பட்டவள். அவள் கட்டுப்படுத்தப்படவில்லை, மாறாக அவள் அப்படி உருவாக்கப்பட்டிருக்கிறாள். இந்த வேறுபாடுதான் முக்கியமானது. அவளுக்குச் சுயசிந்தனை உண்மையில் இல்லை. அவளுக்கு விடுதலை வேட்கை இல்லை. ஏனென்றால் அதைப்பற்றி அவளுக்குத் தெரியாது. அவளுக்கு அது சமூகம், குடும்பம், கல்விநிலையம் எதனாலும் சொல்லிக்கொடுக்கப்படவே இல்லை.ஆகவேதான் அவள் அடிமையாக மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

இஸ்லாமியப்பெண்களை ஆச்சரியமாகச் சொல்வார்கள். அவர்கள் புர்க்கா உட்பட எல்லா பெண்ணடிமைத்தனங்களையும் தங்கள் மதத்தின் ஆணை என ஏற்றுக்கொள்கிறார்கள். புர்க்கா போடும் உரிமைக்காகப் போராடுகிறார்கள். ஆனால் இந்துப்பெண்களும் அதே மனநிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் எல்லா அடிமைத்தனங்களையும் தங்களுக்கான பாதுகாப்பு என்றும் உரிமை என்றும் நினைக்கிறார்கள்.

இந்த மனநிலையில் இருந்து வெளியே வருவதற்குக் கல்விதான் ஒரே வழி. ஆனால் பள்ளி- கல்லூரிக் கல்வியால் பயனில்லை. இலக்கியக்கல்வி, அரசியல்கல்வி, தத்துவக் கல்விதான் அவசியம். அந்தக் கல்வியை அளிக்கும் இலக்கியப்படைப்புகள்தான் எழுதப்படவேண்டும். இலக்கியம் வழியாகவே மீட்பு சாத்தியமாகும்.

எம். சாந்தாதேவி

முந்தைய கட்டுரைநம் குழந்தைகளின் அகவுலகம்