கரூர் சாவுகள், இளைஞர்கள்

 

 

அன்புள்ள ஜெயமோகன்,

இன்றைய தலைமுறையின் பொறுப்பின்மை பற்றிய உங்களுடைய காணொளியை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் விஜய் நடத்திய கூட்டத்தில் நடந்த சாவு செய்திகள் வந்தன. அந்த நிகழ்வின் காணொளியை பார்த்துக் கொண்டிருக்கும் போதே தெரிந்தது, அங்கிருந்த இளைஞர்கள் இருந்த கட்டுப்பாட்டிலும் இல்லை என்பதுதான். பெரும்பாலானவர்கள் குடித்துக் கொண்டிருந்தார்கள் என்று இப்போது செய்திகள் வருகின்றன .ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குடித்து வெறிகொண்டிருக்கும்போது ஒரு தலைவன் சட்டங்களை மீறவும் அடங்காமல் ஆடவும் ஆவேசத்தை ஊட்டினார் என்றால் என்ன நடக்குமோ அதுதான் நடந்திருக்கிறது. சாவுக்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் அங்கு சென்று குடித்து கும்மாளமிட்ட இளைஞர்கள் தானே ஒழிய அரசு போலீஸோ அல்ல. ஆனால் எவரும் பொறுப்பு ஏற்க போவதில்லை. இங்கு ஏழை மக்களின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை. பணக்காரர்கள் நடிகர்கள் அரசியல்வாதிகள் அந்த மதிப்பு அளிப்பதில்லை. அந்த ஏழை மக்களே தங்கள் உயிருக்கு எந்த மதிப்பும் அளிப்பதில்லை என்பதுதான் வருந்தவேண்டிய விஷயம்

பூமிநாதன் சண்முகம்

முந்தைய கட்டுரைஎங்கும் தமிழ்த்தேசியம்
அடுத்த கட்டுரைபங்கேற்பு அரசியல் -திறல் சங்கர்