லோகமா தேவி எனும் வனதேவதையின் தாவரவியல் வகுப்பு பற்றி.

அன்பும், பெரும் மரியாதைக்குரியவருமான திரு. ஜெயமோகன் அவர்களுக்கு

முழுமையறிவின் மதிப்பிற்குரிய ஆசிரியர்களிடம் கற்றுக் கொண்டிருக்கும் மாணவன் எழுதும் கடிதம். சமீபத்தில் 26. டிசம்பர் 2025ல் மதிப்பிற்குரிய லோகமாதேவி அவர்கள் நடத்திய தாவரவியல் வகுப்பிற்க்கு குரும்பத்துடன் கலந்துக் கொண்டேன். அதைப் பற்றிய சிறு நினைவுகளை எழுத வேண்டும் என்று எண்ணி எழுதுகிறேன்.

முதலில், நித்யவனம் வருவதே மகிழ்ச்சியான தருணம். நித்யவனம் வளாகம் முழுவதுமே சுற்றி சுற்றி வந்திருக்கிறேன். நீரோடை முதல் குறுக்குப் பாதை பல ஏறி இறங்கி சுதந்திரமாக உணர்ந்த தருணங்கள் பல . நித்யவனம் உள்ளே வரும் போதே எனக்குள்ளே ஒரு தேடல், விசாரணை, சந்தோசம் என எல்லாம். ஒட்டிக் கொள்ளும். அநேகமாக அனைவரிடமும் பல தருணங்களில் அதை காண முடியும், உணர முடியும். ஒற்ற உணர்வுகளை கொண்ட ஒரு சுற்றமுடன் அறிவார்ந்த கல்வியை அறிந்து கொள்ளும் அற்புதம், என்றைக்கும் வார்த்தைகளால் விவரிப்பது கடினம் தான். உணர்ந்துக் கொள்ள வேண்டியது அது.

வகுப்பின் அனுபவத்திற்க்கு வருகிறேன்.

முதல் நாள் வகுப்பின் ஆரம்பம். ஆலமரத்தடியில் ஆரம்பம் ஆனது. அந்த ஆரம்பம் முதல் முடிவு வரை எங்குமே கொஞ்சம் கூட ஆர்வம் குறையாத வகுப்புகள். அந்த ஆலமரத்தின் அடியில் ஆசிரியர் லோகமாதேவியே ஒரு ஆலமரம் போல் தான் இருந்தார். அதன் வேரைப் போல நாங்கள் சுற்றி இருந்தோம். குடிந்தைகள் ஆலமரத்தின் விழுதுகளைப் போல ஆசிரியரை சூழ்ந்து (தொங்கம் விழுதுகளைம் போல) அந்த இடம் முழுவதும் சூழ்ந்து ஆலமரமாக ஆசிரியர் இருந்தார். சுமார் ஐந்தரை ஏக்கர் பரந்து விரிந்திருக்கும் உலகின் மிகப்பெரிய 550 வருடம் படிமையான ஒற்றை ஆலமரமான ஆந்திராவில் இருக்கும் திம்மம்மா மரம்

பற்றி ஆசிரியர் கூற ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தேன் அந்த திம்மம்மா மரம் போல ஆசிரியர் எங்களை அன்பால் அறிவால், ஆளுமையால் ஆழ்ந்து இருந்தார்.

* banyaur Tree பெயர் வரக் காரணம்

* வேங்கை மரங்கள் நிறைந்து இருந்ததால் வந்த Bengaluru என்ற பெயர்

* பாலை மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் பாலக்காடு

* மருதாணி ஏன் வைக்கிறோம்?

என்று பல தகவல்களை சீராக அடுக்கிக் கொண்டே சென்றார். நாம் இங்கே வகுப்பில் தாவரங்களை அடையாளம் காணப் போவதில்லை. மாறாக தாவரங்களுக்கும். நமக்குமான உறவு, தாவரங்கள் நம் வாழ்வில் ஏன் அவசியம் அதன் மதிப்பு என்ன? மரங்கள் எவ்வாறு நம் வாழ்க்கையோடு இணைந்து வந்திருக்கிறது. வருகிறது என்ற புரிதல், ஏன் நாம் இதையெல்லாம் கவனிக்க வேண்டும். என்று தெளிவாக முதல் வகுப்பிலேயே உறுதி செய்தார்.

ஒரு மான் மரங்களின் முன் நிற்கும் படத்தைக் காண்பித்து அனைவரும் மானை அடையாளம் கண்ட போது, ஏன் நாம் ஒரு மானை மட்டும் அடையாளம் காண்கிறோம். பின் இருக்கும் நூற்றுக்கணக்கான இலைகளையும், மரங்களையும் நாம் அடையாளம் காண்பதில்லை என்று விளக்கினார்.

*இந்தியாவில் 600 வருடங்களுக்கு முன் புளி இல்லை.

*அடுத்த 15o வருடம் pesticides 151 உபயோகிக்காமல் இருந்து வருடம் பயிரிடுவதே original organic.

*ஏன் ஆலமரம் நமது தேசிய மரம் ? national microbe? Agricultural Ethics? என்றால் என்ன? என்று மூன்று நாள் வகுப்புகளும் அருமையான தகவல்களால் நிறைந்து இருந்தது.

அவர் கொடுத்த குடிந்தைகளுக்கும், பெரியவர்களுக்குமான தாவரங்கள் பற்றிய Task-ல் விந்தையாக பெரியவர்கள் குழந்தையாக மாறி தாவரங்களை தேடி ஓடி கொண்டிருந்தார்கள், அந்த வனமே மகிழ்ச்சியாக இருந்தது. அந்த Task-ன் ஒவ்வொரு நொடியிலும் குடிந்தைகள் கையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட bracelet இலைகளின் வடிவம், சிறந்த புகைப்படம் இப்படி இனிமையாக அமைந்தது Task. இதை போன்று தான் Surprise Quiz Competition இதிலும் பெரியவர்கள் ஆர்வமுடன் வயதை, வகிக்கும் பதவியை மறந்து ஆர்வமுடன் பங்கேற்றார்கள். குதுகலம் நிறைந்த கேள்வி பதில் Quiz போட்டி. இப்படியாக நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

வாழ்வில் முதல் முறை நான் கண்டது.

*தாவரங்களை இன்னும் நெருக்கமாக உணர்ந்துக் கொண்டது.

*குழந்தைகளுக்கு தாவரங்கள் அறிமுகம் கிடைத்தது

*பெண் ஆளுமைகளை பற்றி என் மனைவி அறிந்து அதன் பொருட்டு மனைவி அடைந்த மண எழுச்சி

*குடும்பத்துடன் சேர்ந்து ஒரு அருமையான அவசியமான பாடத்தை, வாழ்வை சிறந்த ஆசிரியர் மூலம் கற்றது.

*குழந்தைகள் கேட்கும் அணைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக, பொருப்பாக, சிரித்த முகத்துடன் பதில் அளிக்கும் ஆசிரியர்.

*Botanyல் இருக்கும் பல்வேறு துறைகள் அறிமுகம்.

*தாவரவியல் ஆளுமைகள் ஆற்றிய பணிகள் மற்றும் அவர்கள் பற்றிய குறிப்புகள்

*கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற, தனக்குக்கிடைத்த பரிசு மற்றும் விருதை வாங்காமல் வகுப்பிற்கு வந்த ஆசிரியர்

*தாவரங்களின் பெயர்கள்.

*மரத்தை கட்டி அணைத்து மரத்தை உணர்ந்தது.

*தாவரங்கள் வளரும் mechanism ஆச்சரிய மூட்டியது.

*அறிவியலில் பெண்ணின் பங்கு.

*நான் முதல் முறை கடிதம் எழுதுவது.(பல வருடங்களாக செய்ய நினைத்து செய்யாமலிருந்தது) செயல் ஒன்றே விடுதலை அளிக்கும். என்ற உங்கள் *சொல்லை நினைவில் வைத்துதான் எழுதுகிறேன்.

*புதிய அற்புதமான நண்பர்களின் அறிமுகங்கள், பழைய நண்பர்களை காண்பது.

*அஜிதன் அவர்கள் அங்கே இருந்ததால் அவருடன் பேசிய, கேட்ட அழகிய நினைவுகள்.

இப்படி இன்னும் பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம்.

எவ்வளவு எழுதினாலும் நான் இந்த வகுப்புகளின் மூலம் அடைந்ததை எழுதி முடிக்க முடியாது.

இதை அனைத்தையும் சாத்தியமாக்கிய மதிப்பிற்குரிய ஆசிரியர்கள், ஜெய மோகன் அவர்கள், உறுதுணையாக இருக்கும் மணி அண்ணா அவர்கள், உணவு விருந்தளிக்கும் அம்மா, ஐயா, அவர்கள் இப்படி அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்ந்து அடுத்த வகுப்பு முடிந்து மீண்டும் எழுத முயற்சிப்பேன் என்று உறுதியுடனும், ஆனந்தத்துடனும் கூறிக் கொள்கிறேன்.

வீட்டிற்க்கு வந்தவுடன் குடும்பத்துடன் அனைவரும் வீட்டை கூட திறக்காமல் இரவு 12 மணி ஆகியும் அங்கிருக்கும் தாவரங்களை அறிந்து அதைப் பற்றி பேசிக் கொண்ட போது மனதில் நினைத்துக் கொண்டேன் சிறந்த ஆசிரியர்களால் நல்ல விதை ஒன்று குழந்தைகளிடமும் எங்களிடமும் விதைக்கப்பட்டுள்ளது என்று.

எழுதியது கையளவு, எழுதாதது கடலளவு.

அன்புடன்

அப்துல் சலீம்தாஜ் நிஷா

(குழந்தைகள்: பாசில் & பாசிகா)

மதுரை.

முந்தைய கட்டுரைவனம் வகுப்பு- கடிதம்
அடுத்த கட்டுரைகுழந்தைகளும் தாவரங்களும் நானும்- லோகமாதேவி