அன்புள்ள ஜெ
உங்கள் குரு நித்ய சைதன்ய யதியைப் பற்றிய உரை சுருக்கமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருந்தது. மேலை தத்துவம், கீழைத்தத்துவம் ஆகியவற்றுக்கு நடுவே உள்ள சமநிலையும்; இலக்கியம் மெய்யியல் ஆகியவற்றுக்கு நடுவே உள்ள இணைப்பும் உங்களுக்கு அவரிடமிருந்துதான் கிடைத்திருக்கிறது. உரிய வயதில் அப்படி ஒரு ஆழ்ந்த ஞானம் கொண்ட மகாகுரு கிடைப்பது என்பது மிகப்பெரிய அதிருஷ்டம். உங்களுடைய தளராத ஊக்கமும், நேர்நிலையான பார்வையும் அவருடைய கொடை என நினைக்கிறேன்.
சௌந்தர்ராஜ்