ஜெயக்குமாரின் இசை வகுப்புகள்

அன்புள்ள ஜெ

மூன்றே நாளில் கர்நாடக இசையை எப்படி அறிமுகம் செய்ய முடியும்? அதைக் கற்க பல ஆண்டுகள் ஆகும் அல்லவா? ஒரு சந்தேகமாகவே இதைக் கேட்கிறேன்.

ராமச்சந்திரன் எஸ்.ஆர்.

அன்புள்ள ராம்

இதை பலமுறை சொல்லிவிட்டேன். இது பாடுவதற்கான வகுப்பு அல்ல. இசை நிபுணர் ஆவதற்கான வகுப்பு அல்ல. இது இசைரசனையை தொடங்குவதற்கான வகுப்பு மட்டுமே.

நம்மில் பலருக்கு இசை ஆர்வமிருக்கும். ரசனையும் இருக்கும். ஆனால் மரபிசையை தொடங்க முடியாத நிலை இருக்கும். நம் வாழ்க்கைச்சூழலில் அதற்கான வாய்ப்பே இருக்காது. அந்த வாய்ப்புதான் இது.

இங்கே ராகம் என்றால் என்ன என்னும் அறிமுகத்துடன் ஒரு பத்து ராகங்களை பழக்கப்படுத்துகிறோம். அறிந்த சினிமாப்பாடல்கள் வழியாக சில கீர்த்தனைகளுக்குள் செல்ல வைக்கிறோம். அது தொடக்கம். நமக்கு தெரிந்த பாடல் ஒலிக்க ஆரம்பித்தாலே நம் செவிகள் கூர்ந்துவிடும்.

ஒரு புதிய ஊருக்குச் செல்கிறோம். அறிமுகமான ஒருவர் அங்கே எதிரில்வந்தால் அந்த ஊரை அறிவதற்கான ஒரு தொடக்கம் அமைகிறதல்லவா, அதேபோலத்தான்.

ஜெ

முந்தைய கட்டுரைமாய யவனிகையின் பின்னே எழுந்த மலர்த்திடல்
அடுத்த கட்டுரைமஞ்சும்மல் பாய்ஸுக்கு கற்பிக்கவேண்டியது…