இணையக் கல்வி, இணையப்போதை – கடிதம்

 

கூடியிருந்து கற்றல்…

கூடியிருந்து கற்றல்…

கற்று என்ன பயன்?

கம்ப்யூட்டர் விளையாட்டும் குழந்தைகளும்

தவிர்ப்பவர்கள்

கல்வியும் சோலையும்

கல்விக்கான மனநிலை என்ன?

ஏன் நேர்க்கல்வி?

அன்புள்ள ஜெ

இணைய வழிக் கல்வி பற்றி நீங்கள் எழுதிய பதில்கள் முக்கியமானவை. நான் இந்த விஷயத்தை என்னுடைய ஆசிரியவாழ்க்கையில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒன்றரை வருடம் கோவிட் தொற்றுநோய்க்காலம் நம்மில் பலரை தனக்குள் ஒடுங்கச் செய்துவிட்டது. இணைய போதைத்தனம், போர்னோகிராபி அடிமைத்தனம் ஆகியவை ஆட்கொண்டுவிட்டன. செல்போன் வழியாக மட்டுமே இப்போது மாணவர்களிடம் தொடர்பு கொள்ள முடியும்.

அதிலும் பல சிக்கல்கள். மின்னஞ்சல்கள், வாட்ஸப் செய்திகள், இன்ஸ்டா செய்திகள், யூடியூப் செய்திகள் என ஏராளமான செய்திகள் ஒவ்வொருவருக்கும் வந்து குவிகின்றன. ஆகவே ஒவ்வொருவரும் அவரவருக்கு தேவையான அல்லது வசதியான செய்திகளையே பார்க்கிறார்கள். நாம் எவருக்கும் எதுவும் தெரிவிக்க முடியாத நிலை. என் பிரின்ஸிப்பால் சொன்னார் இனிமேல் கல்லூரி நிகழ்ச்சிகளை போர்ன் தளங்களில் விளம்பரமாக அறிவித்தால்தான் மாணவர்களிடம் சென்று சேரும் என்று

படிப்பு, ஆய்வு ஆகியவற்றில் யார் நேரில் கிளம்பி வருகிறார்களோ அவர்கள் மட்டும்தான் ஏதாவது செய்ய முடிகிறது. இணையம் வழியாக படிப்பது என்பது ஒரு மாயை. அதில் கவனக்குவிப்பு இல்லை. இணையமே பத்து செகண்டுக்கு ஒருமுறை கவனத்தை கலைத்துக்கொண்டிருக்கிறது. இணையத்தின் இயல்பே நம்மை சிதறடித்துக்கொண்டே இருப்பதுதான். உண்மையான கல்விக்கு நாம் அதை தாண்டியாகவேண்டும். இணையக்கல்வி உண்டா என்று கேட்பவர்கள் ஏற்கனவே இணைய அடிமைகள். இட்லியில் பீர் ஊற்றிச் சாப்பிடும் ஒருவரைப்பற்றி சினிமாவில் காட்டுவார்கள். இவர்களுக்கு இணையப்போதை பழகிவிட்டது. அவர்கள் அறிந்ததெல்லாம் ஒரே சுவைதான். எது கொடுத்தாலும் பீர் ஊற்றி தா என்று கேட்கிறார்கள்

ராஜராஜன்

முந்தைய கட்டுரைகுருகுலக் கல்வியின் அவசியமென்ன?
அடுத்த கட்டுரைசெயலுக்கான சிறந்த வழி