கல்விக்காடு, கடிதம்

அன்புள்ள ஜெ

கல்வி நிகழவேண்டிய காடு பற்றிய உங்கள் காணொளி சிறப்பு. நீங்கள் சொல்லும் அந்த மழைக்கால ‘மூட்’ எனக்கும் காடுகளில் பலமுறை உருவானதுண்டு. அங்கே பெய்யும் மழை வேறெங்கும் பெய்வதில்லை என்று தோன்றும். சொல்லப்போனால் அங்கே அடிக்கும் வெயிலும் வேறுதான். அந்த இடத்தில் அமர்ந்து கற்பவை நேராக நம் ஆழ்மனசுக்கே போய்விடும் என்று தோன்றும். கல்வி என்பது இரண்டு வகை என்கிறீர்கள். அன்றாட உலகியல் கல்வியை நாம் நகரங்களில் கற்கலாம். ஆனால் தத்துவம் இலக்கியம் மெய்யியல் போன்றவற்றை அவற்றுக்குரிய இடங்களிலேயே கற்கவேண்டும். அந்த இடம் நம் அன்றாடத்தில் இருந்து தள்ளியும் இருந்தாகவேண்டும்.

செல்வேந்திரன் ஜெகதீசன்

 

அன்புள்ள செல்வேந்திரன்,

காட்டில் மழை அழகு. ஆனால் வேனில் இன்னொரு வகை அழகு. வேனிலில் நாம் காட்டுக்குள் செல்ல புதிய பாதைகள் அமைகின்றன. செல்லவே முடியாத இடங்களுக்கெல்லாம் செல்லமுடியும். அப்படி பல புதிய இடங்களைக் கண்டடைந்தேன். அத்துடன் காட்டில் கோடையில் கேட்கும் பறவைகளின் ஒலிகளும் முற்றிலும் புதியவை.

ஜெ

முந்தைய கட்டுரைமூளைநடை!