தத்துவவிருட்சம், கடிதம்

ஆசிரியருக்கு,

தாங்கள் இலக்கியத்திலிருந்து வாசகர்களை தத்துவத்திற்கு இட்டுச்செல்லும்பாதை  நன்றாக தெளிவாக தெரிகிறது. .ஆலமரத்தை தத்துவ தரிசனத்தின் அடையாளமாக சொல்லுவார்கள்.கோயம்புத்தூர் ஆனைகட்டி ஆஸ்ரமம்  சுவாமி தயானந்த சுவாமியின் இலச்சினை ஆலமரம்.”கடமை தருவும் உரிமைக்கனியும்என்று அடிக்கடி அவரது கீதை உரையின் போது கூறுவார்.தரு என்றால் விருட்சம், மரம் எனப் பொருள் படும்.

உரைக்கும் சூத்திரத்திற்கும் உண்டான வித்தியாசத்தை எடுத்து காட்டினீர்கள்.சூத்திரத்திலிருந்து உரைகள் வந்து கொண்டிருக்கும்.பகவத் கீதையின் பாரதியார்,சித்பவனாந்தர்,சின்மயானந்தர், சைதன்யர் போன்ற உரைகள் நம்மை மேலும் மேலும் சூத்திரங்களை புரிந்து கொள்ள உதவுகிறது. அதுபோல திருக்குறளும்.தத்துவம் பயில சரியான இடம் ஆலமரத்தின் அடி என்பது, குருவாக இருந்து உபதேசித்த தட்சணாமூர்த்தியின் அடையாளம் நினைவுறதக்கது.”கல்லாலின் புடை அமர்ந்து நான்மறை வேதங்கள்“,என்ற பாடலை நினைவு கூறுகிறேன்.தத்துவம் என்ற விருட்சம் தலைமுறைகள் தோறும் வளர்ந்து வருவதை காண்கிறோம்.மரம் வளர்ந்து கனி கொடுத்து,கனி விதையாகி மீண்டும் மரமாகி தொடரும் குரு சிஷ்ய பரம்பரை.வெட்ட வெட்ட தளிர்க்கும் விருட்சங்கள் அதன் ஆணிவேர் உறுதியாக இருப்பதால் அது போல. நம்முடைய வைதீக, வேத மரபுகள் சூத்திரங்களாக, உரைகளாக தொடர்ந்து நம்முடைய பாரத நாட்டை காத்து வருகிறது.காக்கும்.

தத்துவமரபு அது சைவ சித்தாந்தமோ,வைணவமோ,சமணமோ, கிருத்துவமோ,இஸ்லாமோ  அதன் அடிப்படைகள் மனித விழுமியங்களை வாழ வைத்துக்கொண்டிருப்பதுதான் என்றும் நிலையான ஆலமரம் போன்றது.  

தா.சிதம்பரம்.

முந்தைய கட்டுரைமேடையில் நிகழ்தல்- திரு