மாயாமாளவகௌளை எனும் மாயக்கரம்

பாடகர் பாடுவதற்கு முன்பாக தொண்டையை செருமினாலே, பாடப்போவது என்ன ராகம் என்று பார்வையாளர்கள் மத்தியில் அனுமானம் ஆரம்பமாகிவிடுகிற சூழலில்,

இது  “வா இல்ல  ”வா என்று தடுமாறுகிற ஆரம்ப கட்ட இசை ரசிகர்களுக்கு, ஏப்ரல் மாதம் 18,19,20 தேதிகளில் வெள்ளிமலையில் நடைபெற்ற

கர்நாடக இசை அறிமுகம்  பயிற்சி வகுப்புமிகச் சரியான தொடக்கம்.

வெள்ளி காலை முதல் வகுப்பு.ஆசிரியர் ஜெயக்குமாருக்கும் கர்நாடக இசை அறிமுகம் என்ற வகையில் இதுவே முதல் வகுப்பு. ஆலயக்கலை வகுப்புகள் பலவற்றை வெள்ளிமலையில் நடத்திவரும் அனுபவத்தினால்,சிறந்த முன் தயாரிப்போடு வந்திருந்தார்.

வகுப்பு தொடங்கும் முன்பாக, இந்த முன்னெடுப்புக்காக ஆசிரியர் ஜெயமோகனுக்கும் தனக்குமான உரையாடல்களின் சுருக்கத்தை, மூன்று நாள் பயிலரங்கில் எவை பேசப்படும்,எவை தவிர்க்கப்படும் என்ற தெளிவான திட்ட வரைவை தெரிவித்து ஆரம்பித்தார்.

ஆறு  முதல் அறுபது வயது வரையிலான பார்வையாளர்கள்.இசைக்கு தங்களை பாலகர்களாக பாவித்து கவனக்குவிப்போடு உள்வாங்கினர்.

முதலில் எடுத்துக் கொண்ட ராகம். மாயமாளவ கௌள. சொல்வழக்கில் இவ்வாறென்றாலும் மாயமாளவ/மாயாமாளவ என்றும்  கௌள/கௌளை என்றும்

இணைய வெளியில் புழங்குவதால் சரியான சொற்பிரயோகத்தினை மலையிறங்கியபின் கவிஞர் ரவி சுப்ரமணியம் அவர்களிடம் உறுதி செய்து கொண்டேன்.

மாயாமாளவகௌளைவில் ஆரம்பித்த வகுப்பு ஞாயிறு மதியம் கல்யாணியில் நிறைவடைந்தது. இடையில் மோகனம்,சங்கராபரணம்,ரீதிகௌளை,கரகரப்பிரியா மற்றும் ரசிகரஞ்சனி ராகங்கள்.

ஒவ்வொரு ராகங்களுக்கான ஸ்வரஸ்தானங்கள்.அந்த ராகத்துக்கான ஆரோகணம்அவரோகணம், அவற்றில் அமைந்த பரவலாக அறியப்பட்ட சில கீர்த்தனைகள்.ஸ்வரஸ்தானங்களை விளக்கும் பாடல் ஒலிப்பதிவு துணுக்கு அல்லது நாதஸ்வர ஆலாபனை.பிறகு அந்த ராகத்தை பற்றியோ/கீர்த்தனை பற்றியோ/பாடகர் குறித்தோ ஒரு ஸ்வாரஸ்ய உரையாடல்.

ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ…” –முத்துத்தாண்டவரின் பாடலை மாயாமாளவகௌளை ராகத்தை விளக்க ஒலிக்க விடுபவர்..

சில நிமிடங்களில்,அதே ராகத்தை இனம் காண  ”யெஸ்ஐ லவ் திஸ் லவ்வபுல் இடியட்…” கோபுர வாசலிலே பட பாடலை கேட்கவைப்பார்.

ஜெயக்குமாருடைய பெரியப்பா அவருக்கு வகுத்து தந்த பிரேம் ஆப்ஃ ரெபரென்ஸானலட்சணத்தை(தியரி) தெரிந்து கொண்டு லட்சியத்தில்(பிராக்டிகல்) பாடுதல்குறித்து

மிகச்சரியான உதாரணங்களுடன்வகுப்புகளை வழிநடத்தினார்.

வெள்ளிமலையில்,வெள்ளி மாலையில்,அறுபது குரல்கள் சேர்ந்து ஸ்வரவெளி(சரளி)வரிசை பாடியது அற்புத அனுபவம்குருநித்யா அரங்கில் நடுநாயக புகைப்படமாய் இருக்கும் நாராயணகுருவும்,பக்கவாட்டில் இருக்கும் கோவை ஞானியும், ஒரு கணம் அவையை உற்று பார்ப்பது போன்ற பிரமை எனக்கு மட்டும் தான் ஏற்பட்டதா என்று தெரியவில்லை.

இளையராஜாவின் இசைக்கூடத்தில், பல்லிசைக்கு மத்தியில் தட்டுப்படும் சிறு ஸ்ருதி விலகலையும் மிகச்சரியாக கண்டுபிடித்து சரிசெய்வார் என்று கேள்விப்பட்டதுண்டு.

மாணவர் நிறையின் இருபுறமும் சரளி வரிசை பயிற்சி செய்கையில் எவர் ஸ்ருதி விலகுகிறார் என்று துல்லியமாக கண்டுபிடித்துவிடுகிறார் ஜெயக்குமார்.கவிஞர் சாம்ராஜ் தனது கம்பீரக் குரலில் சட்ஜமத்தில் சஞ்சாரிப்பதையும்,ஓவியர் ஜெயராம் தனது தணிந்த குரலில் சரளிவரிசையில் தவழ்ந்துவருவதையும் ஒன்றாய் காண நேர்ந்தது.

) : சொற்களை சொல்லும் முறையில் கவித்துவமாக ஆவது போல ஸ்வரங்களை பாடுகையில் ஆலாபனையாக ஆகிறது

) : தாளம் என்பது அழகியலுடன் கூடிய காலம்

) : வண்ணங்கள் சேர்ந்த்து ஓவியமாகுதல் போல , சொற்கள் சேர்ந்து கவிதை ஆகுதல் போல, ஸ்வரங்கள் சேர்ந்து ராகமாக ஆகிறது

இலக்கியம் தெரிந்த ஆசிரியரும்,மாணவர்களும் கொண்ட அவை என்பதால் இலக்கியத்தொடு இணைந்த எடுத்துக்காட்டுகள் இயல்பாகவே புழங்கியது.

) : பெரும்பாலான பாடகர்கள் பின்பற்றி வரும் சபாகானம்(தற்போதைய மேடைக் கச்சேரி வடிவத்தை) முதலில் ஒருங்கமைத்த அரியகுடி நாமானுஜ  அய்யங்கார்

) : ஏழு ஸ்வரங்கள் கொண்ட சம்பூர்ணராகம், ஐந்து ஸ்வரங்கள் கொண்ட ஔடவ ராகம், பாலமுரளி கிருஷ்ணாவின் லவங்கி (நான்கு ஸ்வரம்), 

      ராஜாவின் ராஜலகரி(மூன்று ஸ்வரம்)

): கீர்த்தனைக்கும்,கிருதிக்குமான வித்தியாசம்

) : ஜீவ ஸ்வரம்,நியாஸ ஸ்வரம், க்ருஷ ஸ்வரம் குறித்த புரிதல்கள்

) : வர்ணம் முதல் விருத்தம் வரையிலான பாடல் முறைகளுக்கான விளக்கங்கள்

மூன்று நாட்களில் தெரிந்து கொண்ட டெக்னிக்கல் சமாச்சாரங்கள் ஏராளம்.

ஆசிரியரின் அருகமர்ந்து கற்றுக்கொள்வது குறித்து தொடர்ந்து சொல்லி வருகிறீர்கள். அடிப்படை ஒழுங்குகள்,ஆரம்ப கட்ட புரிதல்கள்,அதையொட்டிய சிந்தனையோட்டத்தை மேம்படுத்திக் கொள்ள முழுமையறிவு முன்னெடுப்புகள் எவ்வாறு துணைபுரிகிறதென்பதை அனுவத்தில் அறிந்து கொள்ளும் நண்பர்கள் ஏராளம்.

வகுப்புகளை இயல்பாகவும், பகடியாகவும் அவ்வப்போது ஆஃப்லைன் சங்கதிகளை அள்ளித் தெளித்தபடியும் நடத்துவதில் ஜெயக்குமார் மிளிர்கிறார்.

) : ஸ்ருங்கார பதம் குறித்து சபையில் பாடவேண்டி டி.பிருந்தாவிடம் பாடம் பயில்கிறார் பாடகர் ஒருவர். கற்றுமுடித்தப்பின் மியூசிக் அகாடமியில் கச்சேரி,

பாடகர் பாடுவதை முன்வரிசை நாற்காலி ஒன்றில் குத்துகாலிட்டு அமர்ந்தபடி கேட்டுக்கொண்டு இருக்கிறார் பிருந்தா.பாதியில்அய்யரேஸ்ருங்கார பதம் நான் சொல்லிக்கொடுத்த மாதிரி பாடும்,இல்லென்னா எங்கிட்ட கத்துகிட்டதா சொல்லாதீர்…”

):ஒரு பாடகரிடம் பைரவிக்கும் ஆனந்தபைரவிக்கு உள்ள வித்தியாசம் பற்றி கேட்டதற்கு கரண்டிக்கும் பாதாள கரண்டிக்குமான வித்தியாசம் என பதிலளித்தது.

): தியாசபிகல் சொஸைட்டியில் தங்கியிருந்த டைகர் வரசாச்சாரியின் குறட்டை சத்தத்தை, “டைகர் ஈஸ் ஸ்லீப்பிங்என்று வந்திருந்த வெளிநாட்டினருக்கு பீதியை கிளப்பிய ருக்மணி தேவி அம்மையார்.

ஓள): வேறொரு பாடகர் கச்சேரியில் பாடிய வர்ணம் ஒன்றை யானைக்கும்கௌபீனத்துக்கும் ஒப்பிட்டு சுப்புடு எழுதியதை கண்டித்துஹூ ஈஸ் தட் சுப்புடு, ஆஸ்க் ஹிம் டு கெட் அவுட்ஐ வில் சிங் ஆப்டர் தட்..” என்று தனது எதிர்ப்பை பதிவு செய்த பாலமுரளி கிருஷ்ணா.

வெள்ளி காலை மாயாமாளவகௌளைவில் ஆரம்பித்த கர்நாடக இசை எனும் மாயக்கரம்ஞாயிறு மதியம் வரை மதிமயங்க வைத்திருந்தது. சங்கதிகளை வீணையில் வாசிக்கையில், வீணையின் அமைப்பினையொட்டி, அவை கடல் அலைபோல வெளிப்படுவதற்கும், வயலின் மற்றும் நாதஸ்வரத்தின் அமைப்பினால்,நீர்வீழ்ச்சியில் இருந்து பாய்ந்து கீழிறங்கும் நீராகவும் உருவகித்து வேறுபாட்டினை விளக்கியது மூன்று நாள் நிகழ்வின் உச்சம்.

யோகேஸ்வரன் ராமநாதன்.

முந்தைய கட்டுரைதத்துவவிருட்சம், கடிதம்