தமிழிலக்கியத்தைப் பற்றிய காணொளிகள் இந்த தொடரில் குறைவாகவே இடம்பெறுகின்றன. தமிழ் இலக்கியத்தைப் பற்றி நிறையவே பேசியிருக்கிறீர்கள். இன்னும்கூட பல விஷயங்கள் பரவலாக தெரியவரவில்லை. இலக்கியம் என்பது கருத்து சொல்வது என்றும், எல்லா கருத்தும் அரசியல் மட்டுமே என்றும் நம்பும் பெரும் கும்பல் இன்றைக்கும் உள்ளது. நீங்கள் எழுதியிருக்கும் விஷயங்களையே காணொளிகளாகவும் வெளியிட முடிந்தால் பலபேரிடம் சென்று சேரும்.
ஏனென்றால் இன்றக்கு இலக்கியம் பற்றிப் பேசுபவர்களே மிகக்குறைவானவர்கள்தான் . பெரும்பாலானவர்கள் அரசியலைத்தான் இலக்கியம் என்ற பேரில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இங்கே நிகழும் விவாதங்களில் இலக்கியம் பேசுபொருளாக ஆவதே நீங்கள் ஏதாவது சொல்லும்போது மட்டும்தான். பலசமயம் அந்த விவாதம் மலினமாக எதிர்த்தரப்பினரால் நடத்தப்படும். ஆனால் அப்போதுகூட நீங்கள் நான்கு இலக்கியவாதிகளின் பெயர்கள், நாலைந்து புத்தகப்பயர்கள் சொல்லிவிடுவீர்கள். அந்தவகையில் லாபம் என நினைத்துக்கொள்வேன்.
நாம் சொல்லவேண்டியதைச் சொல்லிக்கொண்டே இருந்தாகவேண்டும். நீங்களே சொன்னதுபோல பெரிய அருவி கொட்டினால்தான் இவர்களின் மண்டைக்குள் ஓரிரு துளிகள் சென்று சேரும். அவ்வகையில் இன்னும் பல காணொளிகள் வரவேண்டும்.
ராகவ் ராம்