இந்திய சிற்பக்கலை – ஆலயக்கட்டுமானக்கலை ஆகியவற்றைப் பற்றி ஜெயக்குமார் நடத்திவரும் வகுப்புகள் இன்று தமிழகத்தில் நிகழும் முதன்மையான கலாச்சாரநிகழ்வுகள். பெருவரவேற்பு பெற்றிருக்கும் இவ்வகுப்பின் அடுத்த அமர்வு வரும் ஜனவரி 24, 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் நிகழ்கிறது. ஆர்வமுள்ளோர் எழுதலாம்
தொடர்புக்கு [email protected]
- ஒளிரும் பொற்கணங்கள்
- திட்டு, முதற்சாதனை
- கலையில் உயிர்கொள்ளுதல்
- கலையில் விழித்தெழுதல்
- கலை கண்விழித்தல்
- பாறையும் கோபுரமும்
- பதாமி பயணம்
- துளி மதுரம்
- ஆலயக்கலை :கற்றல் உணர்தல்
வரவிருக்கும் நிகழ்வுகள்
இப்போதே முன்பதிவு செய்யலாம்
சைவம் அறிமுக வகுப்புகள்
தமிழர்களில் சைவர்களே மிகுதி. ஆனால் சைவம் பற்றிய மிக எளிய அடிப்படைப்புரிதல்கள் கொண்டவர்கள் மிகமிகக் குறைவு. சைவசித்தாந்தமே இந்திய தத்துவ மரபுகளில் இறுதியாகத் தோன்றியது. அதுவரையிலான எல்லா இந்திய மெய்யியல்களை தொகுத்துக்கொண்டு முன்னெழுந்தது அது என்பார்கள். சென்ற தலைமுறை வரை சைவ சித்தாந்த வகுப்புகள் தமிழகத்தில் பரவலாக நிகழ்ந்து வந்தன. இன்று அவை மிக அருகிவிட்டன.
இன்றைய நவீனக்கல்வி பெற்ற இளைஞர்களுக்காக சைவசித்தாந்தத்தை அறிமுகம் செய்யும் வகுப்புகளை முனைவர் சாந்திகுமார அடிகள் நடத்திவருகிறார். ஏற்கனவே இரண்டு வகுப்புகள் முடிந்துள்ளன. அவை பெரும் திறப்புகளை அளித்தவை என பங்குபெற்றோர் எழுதியுள்ளனர். மீண்டும் இவ்வகுப்புகள் நிகழ்கின்றன. இவை மதச்சடங்குகள், ஆசாரங்கள் ஏதுமில்லாத தத்துவ வகுப்புகள். அனைத்து மதத்தினரும், மதநம்பிக்கை இல்லாதவர்களும் பங்குகொள்ளலாம். சைவ மதநம்பிக்கை உடையவர்கள் தங்கள் பாதையை மேலும் தெளிவுசெய்துகொண்டு சாந்திகுமார அடிகளின் வழி தொடரலாம்
நாள் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1, 2 (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க [email protected]
சைவசித்தாந்தமும் தத்துவக் கல்வியும்,ஒரு வினா
இந்திய தத்துவம்- இரண்டாம் நிலை வகுப்பு மீண்டும்
இந்திய தத்துவம் இரண்டாம் நிலை வகுப்பு மீண்டும் நிகழ்கிறது. பிப்ரவரி 7,8 மற்றும் 9 ஆம் தேதிகளில் இவ்வகுப்பு நிகழும். இந்திய தத்துவம் முதல் வகுப்பு முடிந்தவர்கள் பங்கு பெறுவதற்குரியது. இவ்வகுப்பை முன்னர் பயின்றவர்கள் மேலதிகத் தெளிவுக்காக மீண்டும் கலந்துகொள்வதென்றாலும் கலந்துகொள்ளலாம்.
தொடர்புக்கு
தொடர்புக்கு [email protected]
தாவரங்கள் ,சூழியல்- ஓர் அறிமுகம்
சென்ற ஆண்டில் இரண்டு முறை பறவைகள் பார்த்தல் நிகழ்வை நடத்தினோம். எங்கள் நோக்கம் இன்றைய வாசகர்கள் இயற்கையுடனான உறவை உருவாக்கிக்கொள்வதற்கான வழியை அமைத்தலாக இருந்தது. மெய்யியல் ஆர்வம், தியானப்பயிற்சி கொண்டவர்கள் இயற்கையுடன் உறவை உருவாக்கிக் கொள்ளவில்லை என்றால் அவர்களின் பயணம் நிறைவடைய முடியாது. அதற்குரிய சிறந்த வழி பறவை பார்த்தல்.
ஆனால் நடைமுறையில் அது பத்துவயது முதலான குழந்தைகளுக்கு கவனத்தைக் குவிப்பதற்கான பயிற்சிமுறையாக ஆகியது. ஏராளமான பெற்றோர் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். செல்பேசியில் மூழ்கியிருக்கும் குழந்தைகள் ஒரு காட்டுச்சூழலில், பறவைகளுக்காக ஆழ்ந்த கவனம் கொண்டு காத்திருப்பதைக் கண்டனர். குழந்தைகள் இன்றைய ஊடகச் சூழலின் அலைக்கழிப்புகளில் இருந்து வெளிவருவதற்கான ஒரு சிறந்த வழியாக அது இருந்தது.
பறவைபார்த்தலுடன் இயல்பாக இணையவேண்டிய ஒன்று தாவரங்களைப் பற்றிய அறிதல். நம்மைச் சூழந்திருக்கும் செடிகள், மரங்கள், மலர்கள் பற்றிய ஓர் அடிப்படைப்புரிதல் நமக்கும் இயற்கைக்குமான ஆழ்ந்த உறவின் தொடக்கமாக ஆகும்தன்மை கொண்டது. ஒருமுறை அந்த திறப்பை அடைந்துவிட்டால் செல்லுமிடமெல்லாம் நாம் செடிகளை, மரங்களைப் பார்க்க ஆரம்பித்துவிடுவோம். அது ஒரு பெரிய அகவாழ்க்கை.
இது தாவரவியல் கல்வி அல்ல. நம் தோட்டத்துச் தாவரங்கள், நம்மைச்சூழ்ந்து ஊரிலுள்ள தாவரங்கள், காட்டுத்தாவரங்கள் என அடிப்படையான செடிகொடிகளின் பெயர்கள், இயல்புகள் பற்றிய ஓர் அறிமுகம் மட்டுமே. ஒரு பொதுவான அறிவியக்கவாதி, ஒரு மாணவர், ஒரு குடும்பத்தலைவி அறிந்திருக்கவேண்டிய செய்திகள். சிறிய கானுலாவுடன் இதை கற்பிக்கிறோம்.
முனைவர் லோகமாதேவி தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றவர் , பேராசிரியர். உலகப்புகழ்பெற்ற தாவரவியல் இதழ்களில் எழுதிவருபவர். சாக்கே போன்ற முக்கியமான தாவரவியல் நூல்களை எழுதியவர். தாவரவியல் செய்திகளை இத்தனை சுவாரசியமாக எழுதமுடியுமா என வாசகர்களை எண்ணச்செய்தவர்.
வரும் பிப்ரவரி 14, 15 மற்றும் 16 (வெள்ளி சனி ஞாயிறு) கிழமைகளில் லோகமாதேவி நடத்தும் தாவரங்கள் அறிமுக வகுப்புகள் நிகழும். ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.
இப்போதே பதிவுசெய்யலாம்
தொடர்புக்கு
இந்திய தத்துவ இயல், மூன்றாவது நிலை வகுப்பு
இந்திய தத்துவ இயலின் முதல் இரண்டுநிலை வகுப்புகளில் கலந்துகொண்டவர்கள் கலந்துகொள்வதற்கான மூன்றாவது நிலை வகுப்பு வரும் பிப்ரவரி 21 ,22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நிகழும். இப்போதே விண்ணப்பிக்கலாம்.
தொடர்புக்கு
உளக்குவிப்பு- தியானம் பயிற்சிகள்
இந்தக் காலகட்டத்தின் முதன்மையான சிக்கல்களான கவனக்குவிப்பின்மை, துயில்நீக்கம் ஆகியவற்றுக்கு வாழ்க்கைமுறை சார்ந்த தீர்வென யோகமும் தியானமும் உலகமெங்கும் முன்வைக்கப்படுகின்றன. தத்துவம், கலை ஆகியவற்றுக்கான அறிமுக வகுப்புகள் நடத்தத் தொடங்கியபோது கூடவே கவனக்குவிப்புக்கான வகுப்புகளின் தேவையை உணர்ந்தோம். இயல்பாக தொடங்கப்பட்ட அவ்வகுப்புகள் பலநூறு பேருக்குப் பயனுள்ளவையாக ஆகி இன்று முதன்மைநிகழ்வாக ஆகிவிட்டிருக்கின்றன.
யோகம் -தியானம் ஆகியவை உரிய ஆசிரியரின் வழிகாட்டலுடன் செய்யப்படவேண்டியவை. அவை எளிய பயிற்சிகள் அல்ல. அந்த ஆசிரியர் தொழில்நுட்பப் பயிற்சியாளரும் அல்ல. முழுமையான வாழ்க்கைவழிகாட்டியென்றும் அவர் அமையவேண்டும். அத்தகைய தகுதிகொண்டவர்களால் இவ்வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தில்லை செந்தில் பிரபு நடத்தும் யோக- தியான வகுப்புகள் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக நிகழ்ந்து வருகின்றன. அடுத்த வகுப்பு பிப்ரவரி 28 மார்ச் 1 மற்றும்2 ( வெள்ளி சனி ஞாயிறு) கிழமைகளில் நிகழும். புதியதாகக் கற்கவிரும்புபவர்களும், ஏற்கனவே இவ்வகுப்பில் கலந்துகொண்டு அப்யிற்சியை தொடரவிரும்புபவர்களும் கலந்துகொள்ளலாம். இப்போதே பதிவுசெய்யலாம்.
தொடர்புக்கு