உளக்குவிப்பு- தியானம் பயிற்சி

 

இன்றைய வாழ்க்கையின் மிகப்பெரிய உளவியல் சவால் என்பது கவனசசிதறலை வென்று நம் உள்ளத்தைக் குவிப்பதுதான். மாபெரும் ஊடகப்பெருக்கம் இன்று  நம்மை விளம்பரங்களாக, கேளிக்கையாக, சூதாடடமாக சிதறடித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு எதிரான பூராடடமாகவே நம் வாழ்க்கை மாறியுள்ளது. உலகமெங்கும் இன்று ஆசியாவின் தியானமும் யோகமும் பெற்றுள்ள பெரும் புகழ்  இதனால்தான்.

தில் லை செந்திலப்பிரபு அவர்கள் கற்பிக்கும் இந்த கவனக்குவிப்பு- தியான முறை இன்றைய நவீன மனிதனுக்காக பண்டைய யோகமுறைகளையும் தியான முறைகளையும் சில ஹடயோக முறைகளையும் காலத்து உருவாக்கப்பட்ட்து எளிமையான பயிற்சிகள் வழியாக உளக்குவிப்பை பயிற்றுவிக்கிறார்.

1970 களில் உருவாக்கி உலகமெங்கும் சென்று வெற்றிபெற்ற இம்முறை இன்று தொடர்சசியான ஆய்வுகள் மற்றும் பங்கேற்பாளர்களின் வாழ்க்கை சார்ந்த எதிர்வினைகள் வழியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. கடைப்பிடிப்பதற்கு எளியதும்கூட.

தில்லை செந்திலப்பிரபு அவர்கள் நவீன யோக- தியான முறைகளில் முப்பத்தைந்து ஆண்டுக்கால பயிற்சியும் அனுபவமும் கொண்டவர்.

நாள் நவம்பர் 29, 30 டிசம்பர் 1

தொடர்புக்கு [email protected]

அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள் 

இடமிருப்பவை

இந்திய ஆலயக்கலை அறிமுகம். தொடக்கநிலையினருக்காக 

ஜெயக்குமார் பரத்வாஜ் நடத்தும் இந்திய ஆலய- சிற்பக்கலை அறிமுக வகுப்புகளில் இதுவரை முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். ஜெயக்குமாருடன் தாராசுரம், நார்த்தாமலை, பேலூர், ஹம்பி, அஜந்தா என தொடர் சிற்பக்கலைப் பயணங்களையும் செய்து வருகிறார்கள். இரண்டாம் நிலை வகுப்புகள் முடித்தவர்கள் ஆலயங்களுக்குச் சென்று சிறு நூல்களை எழுதும் பயிற்சி பெற்று பணிகளைத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்த வகுப்புகள் இந்திய ஆலயக்கலையை எப்படி ரசிப்பது என்பதற்கான அடிப்படைப் பயிற்சிகளை அளிக்கின்றன. மிகத்தொடக்கநிலையினர்கூட பங்கேற்கலாம். இந்திய கோயில்களின் அமைப்பு, இந்தியச் சிற்பங்களின் அழகியல் ஆகியவை கற்பிக்கப்படும். நாம் சாதாரணமாகச் சென்றுவரும் ஆலயங்கள் சட்டென்று முற்றிலும் புதிய ஒளியில் துலங்க ஆரம்பிப்பது வாழ்வின் புதிய தொடக்கமாகவே அமைவது என்பதை பலரும் பதிவுசெய்துள்ளனர்.

சிற்பங்களை அறிவது என்பது வெறுமே கலைப்பயிற்சி மட்டும் அல்ல. ஆன்மிக- தியானப் பயிற்சியும்கூட. ஆலயச் சிற்பங்கள் நுண்பொருட்களை விழிவழியாக உணர்த்தும்பொருட்டு உருவாக்கப்பட்டவை. முறையாக அறியாமல் அவற்றை நாம் உணரமுடியாது.

நாள் 8 9 மற்றும் 10 நவம்பர் (வெள்ளி சனி ஞாயிறு)

தொடர்புக்கு [email protected]

 

நிஷா மன்ஸூர் ஏற்கனவே நடத்திய இஸ்லாமிய தத்துவம்- சூஃபி மரபு அறிமுகம் ஓர் மகத்தான அனுபவமாக அமைந்தது என்று பங்கேற்றோர் கூறினார்கள். குறிப்பாக இஸ்லாம் அல்லாதவர்களுக்கு இஸ்லாமின் வரலாறு, அதன் ஆன்மிகமையம் ஆகியவற்றை அறிமுகம் செய்தது. இஸ்லாமை மட்டும் அல்ல ஆன்மிகம், கலை ஆகிய அனுபவங்களையே முற்றிலும் புதிய ஒளியில் பார்க்கச்செய்த மாபெரும் தொடக்கமாக அது அமைந்தது என்றனர்.

இஸ்லாமிய- சூபி தத்துவம் இந்திய கலைமரபை, இந்திய இசைமரபை அறிந்துகொள்பவர்கள் தவிர்க்கவே முடியாத ஒன்று. இந்திய வரலாற்றையும் தமிழ் வரலாற்றையும் அறியமுனைபவர்கள் அறிந்தாகவேண்டியது. ஆனால் மிகக்குறைவாகவே தமிழர்கள் இஸ்லாமிய தத்துவத்தை அறிந்துள்ளனர். இது அவ்வாறு அறிவதற்கான அறிவார்ந்த ஒரு வாய்ப்பு.

ஆன்மிக சாதகர்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஆன்மிகத்தின் அல்லது யோகத்தின் எந்த ஒரு வழியை பின்பற்றுபவர்கள் என்றாலும் இஸ்லாமிய மெய்யியல் – ஆன்மிக அறிவு என்பது அவர்களின் ஞானத்தை துலங்கச்செய்வதைக் காண்பார்கள். அதை இந்திய மெய்ஞானியர் கபீர் முதல் குருநானக் வரை, ராமகிருஷ்ண பரமஹம்சர் முதல் நித்ய சைதன்ய யதி வரை கூறியுமுள்ளனர்

மீண்டும் இஸ்லாமிய- சூபி தத்துவ அமர்வுகள் நவம்பர் 22, 23 மற்றும் 24 அன்று நிகழும்.

ஆர்வமுள்ளவர்கள் இப்போதே பதிவுசெய்துகொள்ளலாம்

இஸ்லாம், கடிதம்

இஸ்லாமிய தத்துவ வகுப்பு – கொள்ளு நதீம்

இஸ்லாம், கடிதம்

இஸ்லாமிய அறிமுகம், கடிதம்

இஸ்லாமிய ஞானம்- கடிதம்

இஸ்லாம், சமப்பார்வையை உருவாக்கிவிட முடியுமா?

 

 

வரவிருக்கும் நிகழ்வுகள்

 

கிறிஸ்தவ இறையியல் வகுப்புகள்

சிறில் அலெக்ஸ் நடத்தும் கிறிஸ்தவ இறையியல் வகுப்புகள் இரண்டுமுறை நிகழ்ந்துள்ளன. கிறிஸ்தவம் பற்றி நமக்குத்தெரிந்திருப்பது கொஞ்சம். முறையான அறிமுகம் நமக்கு மிகப்பெரிய ஆன்மிக வெளிப்பாடாக அமையும். நம் மதங்களை நாமே மேலும் அறியவும் உதவும்/

வெறும் தத்துவ- ஆன்மிக அறிமுகங்கள் அல்ல இவை. ஒருபக்கம் இவை மத்திய ஆசிய- ஐரோப்பிய வரலாற்றின் அறிமுகம். இன்னொருபக்கம் ஐரோப்பிய சிந்தனை மரபின் அறிமுகம். ஐரோப்பாவை அதன் பண்பாட்டுப்பின்புலத்துடன் அறிந்துகொள்ளவும் இவை மிக உதவியானவை

டிசம்பர் 6,7 மற்றும் டிசம்பர் 8

விண்ணப்பிக்கலாம்

வைணவ இலக்கிய அறிமுகம்

வைணவ பக்தி இலக்கிய அறிமுகம் ஜா.ராஜகோபாலன் மீண்டும் நடத்துகிறார்.

வைணவ பக்தி இலக்கியம் தமிழின் மொழியழகை, இலக்கிய நயங்களை அறிவதற்குரிய அரசப்பெருவழி. கம்பராமாயணம் உள்ளிட்ட பேரிலக்கியங்களுக்குள் நுழைவதற்கான வழியும்கூட. அதற்கப்பால் , அது ஒரு மகத்தான ஆன்மிகக்கல்வி. மானுட உணர்வு நிலைகளின் உச்சங்கள் வழியாக தத்துவத்தை, மெய்யியலைச் சென்று தொடுவது அப்பயணம்.

மரபிலக்கியத்தை எளிதாக, நேரடியாகப் பயிலமுடியாது. பொருளுணர்வது கடினம். அதைவிட உளநிலை அமைவது கடினம். உரிய ஆசிரியரிடமிருந்து கற்பதென்பது ஒரு பெருந்தொடக்கம்

நாள் December 13 -14 -15 )

 

எங்கள் தமிழ் வலைத்தளம் unifiedwisdom.guru  

Our English Website   unifiedwisdom.today 

எங்கள் யூ டியூப் சேனல் முழுமையறிவு யூடியூப்

எங்கள் முகநூல் பக்கம் முழுமையறிவு முகநூல்

எங்கள் இன்ஸ்டா பக்கம் muzumaiaivu insta

மேலைத்தத்துவம்  

அஜிதன் நடத்திய மேலைத்தத்துவ அறிமுக வகுப்பு ஒருமுறை நிகழ்ந்துள்ளது.  கலந்துகொண்டவர்கள் தத்துவம் அளிக்கும் கற்றல் அனுபவம் என்ன என்று உணர்ந்ததாகச் சொன்னார்கள். நவீன வாழ்க்கை, நவீன அறிவியல் அனைத்தைப்பற்றியும் சிந்தனையில் ஒரு தொடக்கம் நிகழ்ந்ததாக எழுதியிருந்தனர். இன்றைய நவீனக்கல்விபெறும் எவரும் அடைந்தே ஆகவேண்டிய முழுமையான பயிற்சி இது.

இது முன்பு நிகழ்ந்த வகுப்பின் மறுநிகழ்வு. புதியவர்களுக்கானது.  இதில் மேலைத்தத்துவம் ஒட்டுமொத்தமாகவும், அதன் அடிப்படையான நவீன ஜெர்மானிய தத்துவம் (காண்ட், ஹெகல்.ஷோப்பனோவர், நீட்சே) முதன்மையாகவும் கற்பிக்கப்படும்.

டிசம்பர் 27,28 மற்றும் 29 அன்று நிகழும்.

 

முந்தைய கட்டுரைகலாச்சாரத்தைப் பயில்வது…
அடுத்த கட்டுரைபக்தி இயக்கம் பற்றி…