பறவைபார்த்தல் வகுப்புகள்

செப்டெம்பர் இறுதி முதல் அக்டோபர் 2 வரை மாணவர்களுக்கு தசரா விடுமுறை. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி. இந்த விடுமுறையில் மாணவர்களுக்கான ஒரு பறவை பார்த்தல் வகுப்புகளை ஒருங்கிணைக்கிறோம்.

அக்டோபர் 2, 3 மற்றும் 4 தேதிகளில். (வியாழன் வெள்ளி சனி) தேதிகளில் இந்நிகழ்வு நடைபெறும். ஞாயிறு ஓய்வுக்குப்பின் திங்கள் அக்டோபர் 5 பள்ளி திரும்பும் வசதிக்காக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய மாணவர்கள் செல்பேசி அடிமைத்தனத்திற்குள் வெகுவேகமாகச் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர் விழிப்பாக இருந்தாலும் பள்ளி மற்றும் நட்புச்சூழலில் இருந்து வரும் தீவிரமான பாதிப்பை தடுக்கமுடியாது. செல்பேசி ஈடுபாடு காரணமாக எதையும் கூர்ந்து கவனிக்கமுடியாதவர்களாக, நீண்டநேரம் கவனம் நிலைக்காத பொறுமையின்மை கொண்டவர்களாக குழந்தைகள் மாறுகிறார்கள்.

 

இந்தச் சிக்கலுக்கு தீர்வாக முதன்மைநாடுகளில் கண்டடையப்பட்டிருப்பது ‘நேரடியான செயல்பாடுகள்’ என்பதே. கானகம் செல்லுதல், கைகளால் செய்யப்படும் செயல்களில் ஈடுபடுதல் ஆகியவை. அவை கவனத்தை வெளிப்பக்கமாக ஈர்த்து உளக்குவிப்பை உருவாக்குகின்றன. ஆகவேதான் பல பெற்றோரின் கோரிக்கைக்கு ஏற்ப பறவை பார்த்தல், தாவரங்களை அவதானித்தல் வகுப்புகளை ஒருங்கிணைக்கிறோம். இது பாதுகாக்கப்பட்ட தனியார் நிலத்திலுள்ள இயற்கையான காட்டில் நிகழும் பயிற்சி. பறவைகளை எப்படிப் பார்ப்பது, எவற்றை கவனிப்பது என்னும் வகுப்புடன் நேரடிப் பயிற்சியும்

ஏற்கனவே மூன்று முறை இந்த பறவை பார்த்தல் வகுப்புகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் பங்குகொண்ட மாணவர்கள் மிகப்பெரிய மாற்றத்தை அடைவதை பெற்றோர் உணர்ந்தனர். அவர்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்தமையால் மீண்டும் விடுமுறைக்காலத்தில் இந்த வகுப்புகள் நிகழ்கின்றன.

15 வயதுக்குக் குறைவான குழந்தைகளுடன் பெற்றோர் அல்லது காப்பாளர் ஒருவர் இருந்தாகவேண்டும் என்பது நிபந்தனை. பெற்றோருக்கும் கட்டணம் உண்டு, அவர்களும் வகுப்பில் அமர்வது நல்லது. மூன்றுநாட்களிலும் கண்டிப்பாகக் கலந்துகொள்ளவேண்டும்.

விண்ணப்பிக்க [email protected]

நாள் அக்டோபர் 2, 3 மற்றும் 4 (வியாழன் ,வெள்ளி, சனி)

நம் குழந்தைகளின் அகவுலகம்

குரு சௌந்தர் நடத்திவரும் பதஞ்சலி யோகமரபின்படியான யோகப்பயிற்சிகளில் இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இரண்டு முறை இரண்டாம்நிலை வகுப்புகளும் நிகழ்ந்துள்ளன. இந்தியாவிற்கு வெளியிலும் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தொலைக்காட்சி ஊடகங்களிலும் யோகமுறைகளை விளக்கி வருகிறார்.

யோகம் இன்றைய காலகட்டத்தின் தவிர்க்கமுடியாத ஒரு வாழ்க்கைக்கூறாக உலகமெங்கும் பரவியுள்ளது. இன்று தொடர்ச்சியாக உடலையும் உள்ளத்தையும் மிகையான அழுத்தத்திலேயே வைத்திருக்கிறோம். உள்ளம் மிகையழுத்தம் கொள்கையில் முதுகு, கழுத்து போன்றவற்றில் வலிகள் உருவாகின்றன. உடல் மிகையழுத்தம் கொள்கையில் உள்ளம் சலிப்பு, சோர்வு, துயிலின்மையை அடைகிறது.

இன்னொரு பக்கம் முதிய அகவையில் உடலை எந்தப் பயிற்சியும் இல்லாமல் வைத்திருக்கிறோம். உடலின் எல்லா பகுதிகளுக்கும் சீரான பயிற்சி அளிப்பதில்லை. உடலுக்கான பயிற்சி ஒரே சமயம் உள்ளத்துக்கான பயிற்சியாகவும் அமைவதில்லை. ஆகவே உடல்வலிகளும், உளச்சோர்வும் உருவாகி ஒன்றையொன்று வளர்க்கின்றன.

யோகம் இளையோர், முதியோர் இருவருக்குமான மீளும்வழியாக உலகமெங்கும் ஏற்பு பெற்றுள்ளது. பதஞ்சலி யோகமுறையின் மிகத்தொன்மையான மரபுகளில் ஒன்றாகிய பிகார் சத்யானந்த ஆசிரிய மரபில் முதுநிலை ஆசிரியருக்கான பயிற்சியை எடுத்துக்கொண்டவர் குரு சௌந்தர். அவர் நடத்தும் இந்த யோகப்பயிற்சி அனைவருக்குமானது.

சரியான யோகப்பயிற்சி நேரடியான ஆசிரியரிடமிருந்து தொடங்கப்படவேண்டும். ஒவ்வொருவருக்கும், அவருடைய பிரச்சினைகளை உணர்ந்து ஆசிரியர் யோகப்பயிற்சியை பரிந்துரைக்கவேண்டும், வழிகாட்டவேண்டும், கட்டுப்படுத்தவும் வேண்டும். ஆகவேதான் நேருக்குநேர் ஆசிரியருடன் மூன்றுநாள் இருந்து கற்கும் இந்தப் பயிற்சி முறையை அறிமுகம் செய்திருக்கிறோம்.

(முன்னர் பங்குகொண்டவர்களும் மீண்டும் பயில விரும்பினால் விண்ணப்பிக்கலாம்)

நாள் செப்டெம்பர் 12, 13 மற்றும் 14 (வெள்ளி சனி ஞாயிறு)

விண்ணப்பிக்க [email protected]

 (இந்தியதத்துவம் முதல்நிலை இடங்கள் நிறைவுற்றன)

இந்திய தத்துவம் ஐந்தாம் நிலை 

இந்திய தத்துவத்தின் ஐந்தாம் நிலை வகுப்பு நிகழ்கிறது. நான்காம் நிலை முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம்.

நாள் செப்டெம்பர் 26 27 மற்றும் 28 (வெள்ளி சனி ஞாயிறு)

முந்தைய கட்டுரைபுத்தரில் அமைதல்