
கிறிஸ்தவ மெய்யியல் அறிமுகம்
சிறில் அலெக்ஸ் நடத்தும் மூன்றாவது கிறிஸ்தவ மெய்யியல் அறிமுக வகுப்பு இது. இதற்கு முந்தைய வகுப்புகள் மிகப்பெரிய வரலாற்று- பண்பாட்டு அறிமுகமாக அமைந்திருந்தன என்று பலரும் எழுதியிருந்தார்கள்.
கிறிஸ்தவமே ஐரோப்பியப் பண்பாட்டின் அடிப்படை. கிறிஸ்தவ இறையியலைப் புரிந்துகொள்ளாமல் ஐரோப்பிய இலக்கியம், திரைப்படம் எதையும் சரிவர அறிய முடியாது. ஐரோப்பியப் பண்பாட்டை ஒட்டியே நாம் வாழும் இன்றைய நவீனப்பண்பாடும் உருவாகியுள்ளது. ஆனால் கிறிஸ்தவர்களேகூட கிறிஸ்தவ இறையியலையோ, வரலாற்றையோ அறிந்தவர்கள் அல்ல. வெறும் பக்தியை மட்டுமே அறிந்திருக்கிறார்கள் கிறிஸ்தவர்கள், எஞ்சியோர் எதையும் அறிந்திருக்கவில்லை.
ஒரு நவீன வாசகன் உலகசிந்தனைக்குள் நுழைவதற்கு கிறிஸ்தவ இறையியல் அறிமுகம் மிக அவசியமானது. இந்து மெய்யியலை முழுதறியவும்கூட அதை அறிவதும் ஒப்பிடுவதும் அவசியமானது. சிறில் கிறிஸ்தவ இறையியலை முறையாகக் கற்றவர். நவீன இலக்கிய எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும்கூட. நிதானமான, நகைச்சுவையுணர்வுகொண்ட பேச்சாளர். இக்கல்வியை அளிக்க முதன்மைத் தகுதி கொண்ட ஆளுமை
நாள் ஏப்ரல் 11, 12 மற்றும் 13
தொடர்புக்கு
[email protected]
- கிறிஸ்தவக் கல்வி இந்து ஆன்மிகத்திற்கு எதற்காக?
- கிறிஸ்தவ இறையியல் கல்வி- கடிதம்
- கிறிஸ்துவமே ஐரோப்பாவின் பண்பாட்டுமையம்
- பைபிள், கடிதங்கள்
- விவிலிய தரிசனம்
அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள், இடமிருப்பவை
நண்பர் ஃபெய்ஸ் காதிரி உருது மொழி அறிஞர். இந்திய உருதுமொழி இலக்கிய இயக்கத்துடன் முப்பதாண்டுகளாகத் தொடர்புடையவர். உருது மொழி ஆசிரியரும்கூட. அவர் நடத்தும் உருது இலக்கிய அறிமுக வகுப்புகள் நிகழ்கின்றன (இலக்கிய ஆர்வமுள்ள மாணவர்கள் இலவசமாகக் கலந்துகொள்ளலாம்)
உருதுமொழி இலக்கியம் இந்தியாவின் பண்பாட்டுச் செல்வங்களில் ஒன்று. பண்டைய இந்தியாவில் உருவான இந்த இலக்கிய மரபு இன்று பாகிஸ்தான் உட்பட பலநாடுகளில் பரவியுள்ளது. குவாஜா முகையதீன் சிஷ்திமுதலிய ஆன்மிகச்செல்வர்கள் மிர்ஸா காலிப் போன்ற நாடோடிப் பெருங்கவிஞர்கள், ஃபெய்ஸ் அகமது ஃபெய்ஸ் போன்ற நவீனக் கவிஞர்கள் என அதன் வீச்சு பெரியது.
இந்தியாவின் இரண்டு பெரிய பண்பாட்டியக்கங்களான சூஃபி மெய்யியல் மற்றும் கஸல் இசைமரபு ஆகியவற்றை அறிய உருது இலக்கிய அறிமுகம் மிக அடிப்படையானது.
உருது இலக்கியத்தை அறியாமல் இந்திய இலக்கியத்தை ஒருவர் அர்த்தபூர்வமாக அறிய முடியாது. ஒட்டுமொத்த இந்தியப் பண்பாட்டையும் புரிந்துகொள்ள முடியாது.
எனக்கே இந்த உருது இலக்கியம் சார்ந்த விரிவான அறிமுகம் இல்லை. ஆகவே நானும் ஒரு மாணவனாக இவ்வகுப்பில் கலந்துகொள்வதாக உள்ளேன்.
நாள் ஏப்ரல் 4,5 மற்றும் 6
தொடர்புக்கு [email protected]
யோக வகுப்புகள்
குரு சௌந்தர் நடத்தும் யோக வகுப்புகள் இன்று மலேசியா, சிஙகப்பூர், இலங்கை என பல நாடுகளில் பரவி வருகின்றன. பிகார் சத்யானந்த யோகமையம் என்னும் மரபார்ந்த அமைப்பின் மாணவராக இருபதாண்டுகளுக்கும் மேல் பயிற்சி பெற்ற சௌந்தரின் வகுப்புகள் பதஞ்சலி வகுத்த யோக முறையை முழுமையாகச் சார்ந்து அமைந்தவை. இதுவரை முழுமையறிவு வழியாக நாநூறுக்கும் மேற்பட்டவர்கள் இங்கே நிகழும் வகுப்புகளில் பங்கெடுத்துள்ளனர்.
யோக வகுப்புகளில் முதன்மையான அம்சம் ஆசிரியரே. அவர் ஓர் உடற்பயிற்சிப் பயிற்றுநர் போன்றவர் அல்ல. அவருடைய ஆளுமை முக்கியமானது. யோகமாணவர்கள் அவருடன் கொள்ளும் நீண்டகால தனிப்பட்ட உறவு யோகத்தில் முக்கியமானது. அத்துடன் யோக முறையின் தத்துவங்களை முறைப்படிக் கற்று அவற்றை விளக்குபவராகவும் அவர் இருக்கவேண்டும். அவ்வகையில் சௌந்தர் இன்று தமிழகத்தில் யோகம் பயிற்றுவிப்போரில் முதன்மையான ஒருவர்.
இன்றைய வாழ்க்கைச்சூழலில் யோகம் இரண்டு நிலைகளில் முக்கியமானது. ஒன்று, உடலில் ஓரிரு உறுப்புகளை மட்டுமே மிகையாக பயன்படுத்திக்கொண்டிருக்கும் நிலை இப்போதிருப்பதுபோல மானுடர்களுக்கு முன்பெப்போதும் இருந்ததில்லை. குறிப்பாக முதுகெலும்பு மற்றும் கழுத்தெலும்புகள் மிக அதிகமான சுமையை அடையும்படி இன்றைய ‘அமர்ந்திருக்கும் வாழ்க்கைமுறை’ நம்மை ஆக்கியுள்ளது. இதன் விளைவாக நீடித்த வலிகள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. முதுகு, கழுத்து வலிகள் உளவியல் சார்ந்தவையும்கூட.
எந்த படைப்பூக்கமும் இல்லாமல், நீண்டநேரம் ஒரே வேலையைச் செய்யும்படி இன்றைய சூழல் நம்மை ஆக்கியுள்ளது. இது உருவாக்கும் சலிப்பினால் நாம் பொருளில்லா கேளிக்கைகளில் அதிகநேரம் செலவிடுகிறோம். ஆகவே உளம் சிதறி கவனம் குவியமுடியாதவர்களாகிறோம். தூக்கமின்மை, தரமான தூக்கம் அமையாமை போன்ற நோய்களை ஈட்டிக்கொள்கிறோம்.
யோகப்பயிற்சி இன்று உலகமெங்கும் இந்தச் சிக்கல்களுக்கான அருமருந்தாக கருதப்படுகிறது. சொல்லப்போனால் இந்தியாவிலேயே அது மிகக்குறைவாக பயிலப்படுகிறது. முறையான மரபுகொண்ட யோக நிலையங்களில், யோக ஆசிரியர்களிடமிருந்து அவற்றை நேரில் பயில்வது மிக அவசியமான ஒன்று. குறிப்பாக மூளையுழைப்பில் இருப்பவர்களுக்கு. அதன்பொருட்டே இந்தப் பயிற்சிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
நாள் மார்ச் 28 29 மற்றும் 30 (வெள்ளி சனி ஞாயிறு)
தொடர்பு [email protected]
வரவிருக்கும் நிகழ்வுகள்
பறவை பார்த்தல்
நாங்கள் நடத்தும் மூன்றாவது பறவை பார்த்தல் நிகழ்வு இது. இயற்கையுடன் இருத்தலுக்கு மிகச்சிறந்த வழிகளில் ஒன்று பறவை பார்த்தல். இன்றைய இணைய- செல்பேசி அடிமைத்தனத்தில் இருந்து வெளியேறுவதற்கான வாசல் அது. சென்ற வகுப்புகளுக்கு வந்த குழந்தைகள் அவ்வகுப்பில் இருந்து பறவைகளின் பேருலகைப் பற்றிய அனுபவத்தை அடைந்தனர். பறவைகளை பார்த்தல் என்பது பொறுமையை பயில்வது. இயற்கையுடன் கலந்து அமைந்திருக்கும் அனுபவம் அது. பறவைகள் ஒட்டுமொத்தமாகவே இயற்கையை அறிமுகம் செய்பவை. நாங்கள் அமைத்துள்ள பறவைபார்த்தல் குழுமத்தை நடத்தும் விஜயபாரதி – ஈஸ்வர மூர்த்தி இருவரும் இவ்வகுப்பை நடத்துகின்றனர். பாதுகாக்கப்பட்ட காடுபோன்ற வளாகத்திற்குள் இந்த வகுப்பு நிகழும்.
மே 2 ,3 மற்றும் 4 (வெள்ளி சனி ஞாயிறு)
[email protected]
- பறவைபார்த்தல், தாவரங்களை அறிதல் ஏன்?
- பறவையும் தாவரங்களும்
- பறவை பார்த்தல் கடிதம்
- பறவை- கடிதம்
- பறவைபார்த்தலும் குழந்தைகளும்
- வனத்தில் ஒரு தவம் – பறவை பார்த்தல் வகுப்பு அனுபவ பதிவு
- பறவை பார்த்தல் ஒரு தியானம்
- துடுப்புவால் கரிச்சானின் நாட்கள்
- இந்திய தத்துவம் 4 ஆவது அமர்வு
- நாள் 9 10 மற்றும் 11 மே (வெள்ளி சனி ஞாயிறு)
- [email protected]
-
இடங்கள் நிறைவுற்றன
தாவரங்கள் அறிமுகம்
லோகமாதேவி நடத்திய தாவரவியல் வகுப்புகள் அண்மையில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இன்றைய உலகில் செயற்கையான இணையக்கேளிக்கைகளில் அடிமையாகக் கிடக்கும் தலைமுறைக்கு இயற்கையுடன் அறிமுகம் கொள்வதற்கு மிகச்சிறந்த வழியாக அமைபவை இந்த வகுப்புகள். குழந்தைகளை செல்பேசி அடிமைத்தனத்தில் இருந்து மீட்பதற்கு உதவியானவை. இந்த வகுப்புகளில் லோகமாதேவி நம்மைச்சுற்றி உள்ள தாவரங்களை, அவற்றின் விந்தைகளை சுவாரசியமான வகுப்புகள் மற்றும் நேரடி கானுலா வழியாக அறிமுகம் செய்கிறார். முனைவர்.லோகமாதேவி உலக அளவில் முதன்மையான தாவரவியல் ஆவண இதழ்களில் எழுதிவரும் பேராசிரியர்
- மே 16 17 மற்றும் 18
- [email protected]
- தாவரவியல் கல்வி எப்படிப்பட்டது?
- வனம், வகுப்பு- கடிதம்
- மந்தாரை- கடிதம்
- தாவர உலகம், கடிதம்
- தாவரங்கள், கடிதம்
- தாவரங்களும் குழந்தைகளும்
- தாவரங்களின் பேருலகம்
- தீராத இன்பங்கள்
- தாவர உலகம், கடிதம்
- ஆலயக்கலை அறிமுகம்
- ஜெயக்குமார் நடத்தும் ஆலயக்கலை வகுப்புகளில் சென்ற மூன்றாண்டுகளில் ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். பலர் வாழ்க்கையின் திருப்புமுனை நிகழ்வென்றே அதைக் குறிப்பிடுகிறார்கள். நம் கலைச்செல்வங்களை, நம் மரபை ஒரே வீச்சில் அறிமுகம் செய்து ஒரு புதிய உலகுக்கு அழைத்துச்செல்லும் வகுப்புகள் இவை. இந்தியாவின் மகத்தான இந்து, பௌத்த, சமண ஆலயங்களின் கட்டமைப்பு, சிற்பங்களின் அழகியல் ஆகியவற்றை இந்த வகுப்புகள் வழியாக ஜெயக்குமார் கற்பிக்கிறார்.
- நாள் மே 23 24 மற்றும் 25
- [email protected]
- வைணவ இலக்கியம்
- ஜா.ராஜகோபாலன் மீண்டும் ஒரு வைணவ இலக்கிய அறிமுக வகுப்பை நடத்துகிறார். வைணவ இலக்கியத்தை அறிமுகம் செய்வதென்பது ஒருபக்கம் வைணவ தத்துவம் மறுபக்கம் சங்ககால அகப்பாடல்களில் இருந்து தொடர்ந்து வரும் தமிழ் அழகியல் மரபு இரண்டையும் அறிந்துகொள்வதுதான். இரண்டிலும் பயிற்சி உடைய ஒருவர் மட்டிலுமே அவ்வகுப்பை நடத்த முடியும். வைணவ இலக்கிய அறிமுகம் என்பது ஒரு பக்கம் பக்தி என்னும் உணர்வின் வெளிப்பாடு. இன்னொரு பக்கம் தூய தமிழ் அனுபவம். தமிழ்மரபை அறிய விரும்பும் எவரும் தவிர்க்கமுடியாத ஒன்று.
- நாள் மே 30 31 ஜூன் 1
- [email protected]
- நாலாயிரம் கடிதம்
- பிரபந்த வகுப்பு கடிதம்
- பிரபந்தக் கல்வி, கடிதம்
- நாலாயிரம் கடிதம்
- பிரபந்தம், கடிதம்
- கண்ணனை அறிதல், கடிதம்
-
வைணவம் கல்வி
-
பிரபந்த வகுப்பு கடிதம்
-
வைணவத்தை அறிதல்
-
வருமாறு ஒன்றில்லையேல்…